தோல்வி கண்டு துவளாதே

நண்பனே !
தோல்வியைக் கண்டு
துவளாதே....!

பிரச்சினைகளை
பிரித்தெறி....

இன்னல்களை
இடித்தெறி....

தடைகளை
தகர்த்தெறி....

பகைமையை
பகுத்தறிவால்
பலவீனப்படுத்து....

தோல்விக்கு
தோல்வி கொடு....

உனக்கே
உடைமையாகும்
தோல்வியெல்லாம்
வெற்றியாய்.......

வெற்றியும்
தோல்வியும்
வேறு வேறு இல்லை....

வெற்றியின்
தொடக்கமே
தோல்விதான்....

நம்பிக்கைகொள்....
தன்னம்பிக்கை கொள்
பாலைவனத்திலும்
நீர் தேடு...

வானம் வசப்படும்...
விதி-உன்னிடம்
மிதி படும்...!

தோல்விகள் எல்லாம்
வெற்றிக் கனியின்
தோல்கள்...
தொடர்ந்து... உரித்தெறி
வெற்றிக் கனி
ருசிப்பாய்...

தொடர்ந்து செல்..
வெற்றி இன்னும்
சில மைல் தூரங்களில்...!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (14-Oct-15, 2:11 am)
பார்வை : 1251

மேலே