முடியுமா உன்னால்

மனிதர்களை
அசைப்பது எளிது..
முடியுமா உன்னால்
அவர்களின்
ஈன இதயங்களை அசைக்க...?
நாவை
அசைப்பது எளிது
முடியுமா உன்னால்
அதைக்கொண்டு தீயவற்றை ஒழித்திட?
கேள்விக்குறியாய்
இருப்பது எளிது
முடியுமா உன்னால்
அதை மாற்றி
ஆச்சரியக்குறியாய் பரிமளித்திட ?
முடியும் என்று
சொல்வது எளிது
முடியுமா உன்னால்
அதை முயற்சியோடு செயல்படுத்த..?
முடியும் என்பது
முயற்சியின் வரையறை
கடந்த பலம்...
முடியாதென்பது
சோம்பலின் வரைமுறை
கடந்த பலவீனம்....
இதற்குள்தான்
அத்தனை வெற்றிகளும்
தோல்விகளும்....