தோல்வி கண்டு துவளாதே
நீ முயற்சி செய்த அனைத்தும் தோற்ற போதும்
உன் முயற்சியை பெற்றோர் ஊக்குவிக்காத போதும்
உன்னை புரிந்து கொள்ளாத சொந்தங்கள் இருந்த போதும்
உன் மீது மட்டுமே பழியை போட்டு,
உன்னை ஏசும் சுற்று சூழல் அமைந்த போதும்
சமுதாயத்தில் சரியான அங்கீகாரம் உனக்கு கிடைக்காத போதும்
திறமை அனைத்தும் இருந்தும் சாதிக்க முடியாத நிலையை தந்து,
விதி உன் வாழ்க்கையோடு விளையாடிய போதும்
கடவுளே உன்னை கை விட்ட போதும்
தோல்வியை கண்டு துவளாதே
உன் மீது நீ வைத்த நம்பிக்கையை இழக்காதே ...
நம்பிக்கை கொள்; உன் மீது நம்பிக்கை கொள்,
உன் திறமை மீது நம்பிக்கை கொள்...
எத்தனை முறை தோற்றாலும் சிலந்தி சோர்வடைவதில்லை
சிலந்தியை போல் வாழ கற்று கொள்
உன் வாழ்வில் வெற்றி பெறுவாய் ...
நட்புடன்
ஷாமிலி முத்துக்குமார்