தந்தை தாலாட்டு

கையில் கிடைத்த ரோஜாவே
உள்ளம் கனியவைக்கும் தேனமுதே
உள்ளம் முழுதும் நீதானே
உலகம் மறந்து நீ தூங்க
உன் புற முதுகு தட்டும்
சேவகன் நான் தானே...
கண்முழித்து கேளாய்
உன் தந்தை சவாரிக்கு தயார்
என் தோளில் சுமந்து உன்னை
உலகத்தை பவனி வர...
நீ தத்தி தவள
நானும் துணைக்கு வருவேன்
நீ அழுவாதே
அனைத்தையும் அள்ளி நான் தருவேன்...
என்னாலே நீ உருவாக
இன்று உன்னாலே
நான் மீண்டும் பிறந்தேன்
உன் அழகு சிரிப்பில்
ஆயுள் கைதியானேன்..