நான் பெற்ற பட்டம் நகைக்கிறது
இரவு பகலென்று
நித்தம் படித்துப்
பெற்ற பட்டப்
படிப்பு என்
பெயருக்கு பின்
போட்டதும் நகைக்கிறது......
அட மூடனே !
உண்ண உணவு.....
உடுத்த உடை......
இருக்க இடம்......
இவற்றில் ஒன்றேனும்
உனக்கு கிட்டாதிருந்தால் – உன்
வாழ்வில் என்னை
அறிந்திருப்பாயா ?..........
கல்வியும் வியாபாரமான
இக்காலத்தில் இப்பட்டம்
உந்தன் பெயருக்குப்
பின்னால் இருப்பது
பொருட்டன்று.............
பல பட்டங்கள்
நீ பெற்றாலும்
அவை உந்தன்
பெயருக்குப் பின்னால்
இருப்பதை விட
அப்படிப்புக்குப் பின்னால்
உன் பெற்றோர்கள்
உடன் பிறப்புகள்
இருப்பதை மறவாதே..........
பட்டம் பெற்றதால்
வேலை உன்னை
தேடி வருமென
பகட்டு வாழ்க்கையினை
வாழ்ந்து மேலும்
பெற்றோர் வியர்வையினில்
வயிறை இனி நிரப்பாதே........
இனியாவது வேலைத்தேடி செல்.....
உனக்காக இல்லையெனினும்
உந்தன் பசி அறியா
தாய்-தந்தைக்கு
ஒருவேளை உணவேனும்
உன் உழைப்பால் நீயளிக்க.........
உந்தன் குறிப்போடு
என்னை மட்டும்
எடுத்துச் சென்றால்
நிச்சயம் வேலையின்றியே
வெறும் கையோடு
மீண்டும் வருவாய்...........
அத்தியாவசிய ஆங்கிலத்தை
நுனிநாக்கில் கொள்ளவில்லை
என கவலை விடு...........
பணியில் இருப்பவர் எல்லாம்
ஆங்கிலேய சிப்பாயல்ல
என தன்னம்பிக்கை கொள்........
அறிந்த மொழியினை
நிதானமாய் கையாளு...........
ஒவ்வொரு நேர்முக
தேர்விற்கும் எதை
எடுத்துச் செல்கிறாயோ
இல்லை எதை
மறந்து செல்கிறாயோ
என்பது ஒருபுறம்.........
தன்னம்பிக்கை
விடாமுயற்சி
இவ்விரண்டையும்
உனதாக்க ஒருபோதும்
தவறாதே !.......
சகிப்புத்தன்மை ஒன்றே
சரித்திரம் படைக்க
வல்லதென மறவாதே !!.........
இளைஞனே புறப்படு
இவ்வுலகில் உனக்காகவும்
காத்திருக்கிறது பணி அல்ல கடமை !!..........
- தஞ்சை குணா