வெயிலில் நிழல் தேடி ஓடியும் ஜாதிகளின் பெயரால் வீழ்கிறோம்
குவியல் குவியலாய்
பெற்றெடுத்த குழந்தைகளை
விட்டு விட இனியொரு வீதியில்லை
குப்பை தொட்டிக்கு அனுமதி கேட்டு
நிற்குது ஒரு கூட்டம்
இரவு தஞ்சம் புகுந்திடத்தானே,
வீதிக்கு மூன்று கோவில் கட்டியும்
உறங்கிட ஒரு வீடு கூட இல்லையே,
வெயிலில் பற்றிடுது கால்கள்
நிழல் தேடி ஓடியும்
ஜாதிகளின் பெயரால் வீழ்வது நிச்சயம் தானே,
பசி தீர காத்திருக்கிறோம் இறைவா
கருனை கொண்டிடு
இல்லையேல் கொண்றிடு