உலக உணவு தினம்
கையேந்தி பவனில் சாப்பிடுபவரும் உண்டு
கையேந்தி சாப்பிடுபவரும் உண்டு
நம் உலகிலே
உலகில் பசியை விட கொடிய நோய்
யாதெனிலும் உண்டோ இராமலிங்கனார்
அணையா அடுப்பை ஏற்றினாலும்
இன்னும் ஒரு சில வீடுகளின்
அடுப்படியில் பூனைகள்
தலை முறைகளை கடந்தே வாழுகின்றன
உணவு உண்டு
உணவு உண்டு வாழ முடிய வில்லை
அதன் சுவை உண்டு
சுவைக்க முடிய வில்லை