உனது பாடலில் பல்லவியாய்

உனது பாடலில் பல்லவியாய்
சரணமுமாய் நானிருக்க ஆசை;
உன் உதடுகளை நான் உரசி
உதட்டுச் சாயமாய் தங்கி,

உன் மேனியை மென்மையாக்கும்
பொன் வண்ண வழலையாகவும்
உன்னைக் குளிர்விக்கும் வாசனைக்
குளியலாகவும் இருந்து

உன் ஈர உடம்பினில் வழுக்கி
விழுகின்ற பூந்துவாலையாகவும்
நீ கட்டிப் பிடித்து உறங்கும்
பட்டுத் தலையணை என்றாகி;

நீ கனவு காண்கையில்
உன்னை நான் முத்தமிட்டு,
நீ துயிலும் போது உன்னை
துயிலாமல் கண்காணித்து;

உன் படுக்கையறையில் புகுந்து
ஒளிர்கின்ற சூரியக் கதிராய் மாறி,
உன்னை மெதுவாக எழுப்பி
புன்னகை சிந்தச் செய்வேனடி!

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (16-Oct-15, 11:30 am)
பார்வை : 104

மேலே