விடுதலை மகிழ்ச்சியோடு முன்னாள் கணவன் ‪

டியர் ஹஸ்பெண்ட்,

உங்களை விட்டு பிரிகிறேன் என்ற நற்செய்தியை சொல்லவே இக்கடிதம்.
ஒரு நல்ல மனைவியாக உங்களோடு 7 வருடங்கள் குடும்பம் நடத்தியதற்கு எனக்கென்று இப்போது எதுவும் இல்லை

அதிலும் கடைசி இரு வாரங்கள் நரகமாக இருந்தன.உங்கள் பாஸ் எனக்கு போன் பண்ணி நீங்கள் வேலையை விட்டு விட்டதாக சொன்னார்.
நீங்கள் வீட்டுக்கு வந்த போது நான் அழகாக ஹேர் கட் செய்திருந்தேன், உங்களுக்கு பிடித்த உணவு செய்திருந்தேன் மற்றும் புது இரவு உடை அணிந்திருந்தேன்

அன்று இரவு நீங்கள் வந்து சில நொடிகளில் சாப்பிட்டு விட்டு ஸ்போர்ட்ஸ் பாத்துட்டு தூங்கப்போய்ட்டீங்க

என்னைக் காதலிக்கிறேன் என்று கூட சொல்லவில்லை என் பக்கம் திரும்பக் கூட இல்லை

நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்களோ அல்லது காதலிக்கவில்லையோ நான் உங்களைப் பிரிய முடிவெடுத்து விட்டேன்

பின் குறிப்பு: என்னைத் தேட வேண்டாம், நானும் உங்கள் நண்பர் ஜானும் அவர் சொந்த ஊருக்கு செல்கிறோம்

by முன்னாள் மனைவி
-------------------------------------------------x----------------------------------------

அன்புள்ள முன்னாள் மனைவிக்கு,

உன் கடிதத்தை விட மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஏதும் இல்லை
நாம் ஏழு வருடங்கள் ஒன்றாக இருந்ததையே பெரிய சாதனையாகக் கருதுகிறேன்

நான் ஸ்போர்ட்ஸ் அதிகமாக பார்க்க காரணமே உன் தொணதொணப்பு தாங்காமல் தான் ஆனால் அது ஒரு போதும் பலனளித்ததில்லை
உன் ஹேர்கட்டை நான் கவனித்தேன் "ஆண் போல இருக்கிறாய்" என சொல்ல நினைத்தேன் ஆனால் நல்லதாக ஏதும் பேச முடியாவிட்டால் ஏதும் பேசாதே என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள் அதனால் அமைதியாகி விட்டேன்

நீ எனக்கு பிடித்தமான உணவு செய்ததாகக் கூறினாய் அனேகமாக நீ ஜானையும் என்னையும் குழப்பிக்கொண்டாய் என நினைக்கிறேன் நான் 5 வருடங்களுக்கு முன்பே பன்றிக்கறி சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்
உன் இரவு உடையையும் பார்த்தேன் அதில் விலை tag கூட இருந்தது அன்று தான் என்னிடம் ஜான் 50 $ வாங்கியிருந்தான் அந்த உடை விலை 49.99$ இது தற்செயலானது என நம்புகிறேன்

இவை எல்லாவற்றுக்கும் அப்புறமும் நாம் பேசி சரி செய்ய முடியுமென நம்பினேன்

அதனால் தான் எனக்கு லாட்டரியில் 10 மில்லியன் டாலர் விழுந்த போது வேலையை ரிசைன் செய்து விட்டு நம் இருவருக்கும் ஜமைக்காவுக்கு டிக்கட் வாங்கினேன்

வீட்டுக்கு வந்து பார்த்தால் உன் கடிதம் தான் இருந்தது
எல்லாவற்றுக்குமே ஒரு காரணம் இருக்குமென நம்புகிறேன், முழு திருப்தி தரும் வாழ்க்கை உனக்கு கிடைக்குமென நம்புகிறேன்
உன் கடிதம் கிடைத்ததால் ஜீவனாம்சமாக சல்லிக்காசு கூட தரத் தேவையில்லை என வக்கீல் சொன்னார்.

டேக் கேர்

பின் குறிப்பு: இதற்கு முன் சொன்னதாக நினைவில்லை ஜான் ஒரு ஆப்ரேஷனுக்கு முன்பு மேரியாக இருந்தவன் அது உங்கள் வாழ்க்கைக்கு பெரும் பிரச்னையாக இருக்காது என நம்புகிறேன்

விடுதலை மகிழ்ச்சியோடு முன்னாள் கணவன்

#‎சுட்டது‬

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (17-Oct-15, 7:39 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 220

மேலே