தந்தையின் தாய்மை

ஆடம்பரம் இல்லாத அழகிய வாழ்க்கை வாழ்ந்துவரும் அருணுக்கும் அவன் மனைவிக்கும் ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்து இரண்டு நிமிடம் கடந்தோடப்போகிறது. தன் மழழையின் முகம் காண ஆயிரம் கனவுகளுடன் உள்ளே நுழைந்த அருண் தன் மகளின் கண்னத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி முத்தமிட்டு நடனம் புரிவதை பார்க்கையில் அழவில்லா ஆனந்தம் தாண்டவமாடிற்று, உடனே தன் கைபேசியில் ஒரு புகைப்படம் எடுத்து சேகரிக்க தொடங்கினான் தன் மகளின் ஒவ்வொரு தருனங்களையும். மாதங்கள் கடந்துவிட்டது, மகளுக்கு எப்போது பெயர் வைக்கப்போகிறாய் என்று அக்கம் பக்கம் வாழ்பவர்கள் கேட்க கூடிய விரைவில் என்று பதில் கூறி அவ்விடமிருந்து சற்று யோசித்தவாரு நடக்க ஆரம்பித்தான். பெயர்கள் கிடைத்தபாடில்லை, சோகத்தில் அமர்ந்து தன் கை பேசியில் இருந்த ஒவ்வொரு புகைப்படத்தையும் விரல்கலால் தொடுதிரையில் வருடிக்கொண்டிருந்தபோது தன் மகளின் கண்னத்தில் முத்தமிடும் வண்ணத்துப்பூச்சியை பார்த்து வர்ணா என தன் மகளுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தான். வண்ணத்துப்பூச்சிக்கும் தன் மகளுக்கும் ஏதோ பந்தம் இருப்பது போல் உணர்ந்து தன் வீட்டின் அமைப்பை ஒரு வண்ணத்துப்பூச்சி போல் மாற்றியமைத்து மகிழும்போது தன் மகளுக்கு ஒரு மாளிகை கட்டி இளவரசியாக்கியதுபோல் ஒரு உணர்வு. காலம் கடந்தது, உயிரற்ற வண்ணத்துப்பூச்சி போல் தன் வீட்டினை பார்க்க தொடங்கினால் வர்ணா.வீட்டின் சுவர் ஓவியங்களில் உள்ள வண்ணத்துப்பூச்சிகள் ஏதோ சிறைச்சாலையில் விலங்கிட்டு அடைக்கப்பட்டுள்ளதுபோல் ஒரு நெருடல் உருவாயிற்று வர்ணாவிற்கு. சுவர்களை பார்த்து ரசிப்பதை நிறுத்தினாள், உயிரற்ற பிணத்தை பார்ப்பது போல் பார்த்தாள் செயற்க்கை வண்ணதுப்பூச்சி உருவங்களை. வீட்டில் நுழையும் போது தன் மகளின் முகத்தில் சோகம் ஆக்கிரமித்துக்கொள்வதை கவனிக்கத் தொடங்கினான் அருண். தன் மகள் பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளுடன் துள்ளி விளையாடுவதை பார்க்கிறான் அதேசமயம் தன் வீட்டுச் சுவர்களை பார்த்து சோகம் ததும்பும் தன் மகளின் முகத்தையும் ஒப்பிட்டு பார்க்கயில் தன் மகளின் சோகக் காரணாம் புரிந்து கொண்டு ஒரு நல்ல வர்ணம் பூசும் நபரை அழைத்து வந்து தன் வீட்டு சுவர்களில் உள்ள வண்ணத்துபூச்சிகளை விடுதலை செய்கிறான். பள்ளி முடிந்து வீடு திரும்பிய வர்ணாவிற்கு வருணிக்க முடியா ஆனந்தம் உண்டாயிற்று. மகளின் விருப்பத்தை கேட்டுத் தெரிந்த அருண் உடனே விரைந்து சென்று நூற்றுக்கும் மேல் செடிகள் வாங்கி வந்து தன் வீட்டுத் தோட்டதில் நட்டு அதில் பூக்கள் பூக்கும் வரை பிறந்த குழந்தயை கவனிப்பது போல் கவனித்துக் கொண்டான். பூக்களின் மேல் வண்ணத்துப்பூச்சி அமரும் தருனத்திற்காக தந்தையும் மகளும் காத்துக்கொண்டிருந்தர். அழகிய காலைப்பொழுதில் பூக்களின் மேல் வண்ணதுப்பூச்சி அமர்ந்து நடனமிடுவதைக் கண்ட வர்ணா தன் தந்தையை ஓடிச்சென்று அழைத்து வந்து காட்டி மகிழயில் வண்ணத்துப்பூச்சிகள் கூட்டமாக ஓர் இடத்தில் அமர்ந்து சிறகை மெல்ல அசைப்பதைக்கண்டு அங்கு சென்று பார்க்கையில் நினைக்கிறான் தன் மகள் பிற்ந்த தினமன்று மனைவி இறந்ததை கூட ஒருகனம் மறந்து மகளின் கன்னத்தில் முத்தமிடும் வண்ணத்துப்பூச்சியை புகைப்படம் எடுத்ததை. நீர் வழியும் கண்ணோடு தன் மகளை கட்டி அனைத்து முத்தமிடும்போது காண்கிறான் வண்ணமிகு வண்ணத்துப்பூச்சி தன் மகளின் கண்ணத்தில் மீண்டும் முத்தமிடுவதை.....

எழுதியவர் : அருண்குமார் (17-Oct-15, 9:56 pm)
சேர்த்தது : அருண்குமார்
பார்வை : 191

மேலே