ஆண் அல்ல பெண், பெண் அல்ல ஆண்

ஆண் ஒரு பெண்ணை
வெறுத்து விட்டால்
வாழும் வரை
அவளை மறப்பதில்லை!

பெண் ஒரு ஆணை
நினைத்து விட்டால்
சொல்லாமல்
சொல்வாள்,
கொல்லாமல்
கொள்வாள்

* * * * * *
ஆண் ஒரு பெண்ணை
நினைத்து விட்டால்
சாகும் வரை
அவளை மறப்பதில்லை!

பெண் ஒரு ஆணை
வெறுத்து விட்டால்
வாழும் வரை
அவனை மீண்டும் நினைப்பதில்லை!!

எழுதியவர் : செல்வமணி (17-Oct-15, 9:08 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 121

மேலே