பாடல் -முஹம்மத் ஸர்பான்

(ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!! வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!!...........)என்ற பாடல் ராகத்தில் நான் எழுதிய பாடல் முழுமையாக படித்து கருத்திடுங்கள்.)

தடைகளை எப்பொழுதும் வென்றுவிடு
உடையாமல் உள்ளத்தை காக்கனுமே!!

தடைகளை எப்பொழுதும் வென்றுவிடு
உடையாமல் உள்ளத்தை காக்கனுமே!!
முள்ளின் பாதையும் கடந்து விடு
ரோஜாவும் அழகுதான் அறிந்ததுண்டு.
முயற்சி செய்திடு உறவே!!உன் வாழ்வில்
வெற்றி ஒரு நாள் கிடைக்கும் உன் கையில்
மனிதா! ஓ மனிதா நீ முயன்றுவிடு
மண்ணோ அது விண்ணோ அதில் கரைந்துவிடு

கனவு காணு எப்போதும் இலக்கை மறத்தல் கூடாது
தோல்வி கண்டு வாழ்க்கையினை சகித்து விடல் ஆகாது.
விழாமல் நடந்த மனிதன் யார் தேடிப்பார்த்து சொல்லுங்கள்
ஓடிச்செல்லும் நாட்களினில் ஆறிப்போகும் காயங்கள்
மண் தாங்கும் மரங்கள் தானே விண்ணினில் மழை தேடும்
தலை இழந்த குழல்கள் தானே நெஞ்சினில் இசையாகும்
கண்ணில் கண்ணீர் வேண்டாமே!!!
மண்ணில் எல்லாம் நடந்திடுமே!!!
தேடும் வழி தொலைவில் இல்லை வெகு விரைவில் புரிந்து விடும்.
மனிதா! ஓ மனிதா நீ முயன்றுவிடு
மண்ணோ அது விண்ணோ அதில் கரைந்துவிடு
தடைகளை எப்பொழுதும் வென்றுவிடு
உடையாமல் உள்ளத்தை காக்கனுமே!!

கடலை கடக்கும் தோழனுக்கு தோளில் சிறகு கிடையாது
காற்றை போல் வீர மிருந்தால் நெருப்பைக் கூட கடந்திடலாம்.
வானம் தொலைவு என்றால் நீ பறவை கூட சிரித்துவிடும்
ஓயாத அலையைபோல காலத்தோடு யுத்தம் செய்!!
உன்னை தூற்றும் வசைகள் தானே சாதிக்கும் தீயாகும்
மேகத்தின் சிறு துளி தானே ஊரெல்லாம் வெள்ளமாகும்
விண்ணில் பறப்போம் வா தோழா
இரண்டு கைகள் போதுமே
வென்ற பின்னும் முயற்சியினை பட்டை தீட்டிக் கொள்
மனிதா! ஓ மனிதா நீ முயன்றுவிடு
மண்ணோ அது விண்ணோ அதில் கரைந்துவிடு

தடைகளை எப்பொழுதும் வென்றுவிடு
உடையாமல் உள்ளத்தை காக்கனுமே!!
முள்ளின் பாதையும் கடந்து விடு
ரோஜாவும் அழகுதான் அறிந்ததுண்டு.
முயற்சி செய்திடு உறவே!!உன் வாழ்வில்
வெற்றி ஒரு நாள் கிடைக்கும் உன் கையில்
மனிதா! ஓ மனிதா நீ முயன்றுவிடு
மண்ணோ அது விண்ணோ அதில் கரைந்துவிடு

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (19-Oct-15, 6:44 pm)
பார்வை : 139

மேலே