இந்த நாடு வேண்டும்
ஊழல் இல்லா நாடு
எனக்கு வேண்டும்!
ஊதியம் சரியாய் தரும் நாடு
எனக்கு வேண்டும்!
பாலியல் இல்லா நாடு
எனக்கு வேண்டும்!
பணத்தை மதிக்கா நாடு
எனக்கு வேண்டும்!
உழைப்பை நம்பும் நாடு
எனக்கு வேண்டும்!
உழைத்தவன் கையில் நாடு
இருக்க வேண்டும்!
பதவி ஆசை வெறுக்கும்
நாடு வேண்டும்!
பண்டைமாற்றும் முறைதான்
நாட்டில் வேண்டும்!
திருடன் இல்லா நாடு
எனக்கு வேண்டும்!
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
மதிக்க வேண்டும்!!
விவசாய தற்கொலைகள்
ஒழிய வேண்டும்!
அதற்கு கடனை எல்லாம் நாடு
செலுத்த வேண்டும்!
அறிவின் வளர்ச்சியில் நாடு
முதலிடம் வேண்டும்!
அகிம்சை போர் மட்டும் புரியும்
நாடு வேண்டும்!!
வரலாறை மறைக்கா நாடு
எனக்கு வேண்டும்!
வானொலியில் தேசிய கீதம்
ஒலிக்க வேண்டும்!!
சமூகம் தொலைத்த புன்னகை
நாட்டில் வேண்டும்!
அதற்க்கு சரியாய் நடக்கும் அரசாங்கம் முதலில் வேண்டும்!