அப்பாவின் இல்லம்
என்னுடைய முதல் படைப்பு
அழகான ஒரு சிவப்பு நிற கார் தெருவில் வந்து நின்றது. அங்கு அமைதியான சூழலும் பூத்து குலுங்கும் பூக்களும், மரம், செடிகளும் இருந்தன. அந்த காரில் இருந்து ஒரு பெரியோரும் ஒரு இளஞ்சரும் இறங்கினர். அவர்கள் அங்கு இருக்கும் ஒரு முதியோர் இல்லத்தை நோக்கி சென்றனர்.
வரவேற்பு அறையில் இருந்து ஒரு குரல் சார் உட்காருங்கள். தாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்.
வணக்கம் மேடம் இவர் என்னோட அப்பா, இவரை இங்கே சேர்கத்தான் நான் வந்திருக்கிறேன். இந்த இல்லத்தின் பீஸ் டீடைல்ஸ் கொஞ்சம் சொலுங்க.
சார் இந்த இல்லத்தில் 100 முதியோருக்கு மேல் இருப்பார்கள், கிட்ட தட்ட 50 வருடமாக இருக்கிறது. இதை ஒரூ பாதர் நடத்தி வருகிறார்.
ஓகே மேடம் பீஸ் சொலுங்க.
சார் மாதம் 15000 ருபாய் ஆகும்.
ஓகே. அப்பா நீங்க இங்கே இருங்க காரில் உங்களுடைய பொருட்களை கொண்டு வருகிறேன்.
காரில் பொருட்களை எடுத்து கொண்டிருக்கும் பொழுது ஒரு போன் கால் என்னங்க உங்க அப்பாவ இள்ளத்தில விட்டாச்சா. இல்லம் நம்ம வீட்ல இருந்து தூரம் தான, அடிகடி வர போறாரு. சரி பாதர் வந்துட்டாரு அப்பா பாதர் கிட்ட ஏதோ பேசிக்கிட்டு இருக்காரூ . நான் அப்புறம் கால் பண்றேன்.
ஹலோ பாதர் அப்பாவ இங்க தான் சேர்த்திருக்கேன்.நல்லா பாத்துகோங்க. பாதர் இவர் தான் என்னோட மகன்.
வரவேற்பு அறையில் இருந்த பெண்ணின் குரல் சார் உங்க ரூம வந்து பாருங்க.
அப்பா நீங்க ரூம பாத்துட்டு வாங்க நான் பாதர் கிட்ட பேசிக்கிட்டுஇருக்கிறேன்.
பாதர் அப்பாக்கிட்ட ரொம்ப நேரமா உரையாடிக்கொண்டிருந்தீங்க அப்பாவ உங்களுக்கு முனாடியே தெரியுமா ?
தெரியும்பா 30 வருடத்திற்கு முன்னாடி இந்த இல்லத்தில வந்து ஒரு அனாதை குழந்தையை என்கிட்ட இருந்து தத்து எடுத்திட்டு போநாறு. இந்த விசியம் உன்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னாரு. எனக்கு மனசு கேக்கலப்பா. நீ ஒன்னும் கவலை படாதே நான் உங்க அப்பாவை பார்த்துகொள்கிறேன்.
அழுதபடியே மகன்.
இப்படிக்கு அப்பாவை நேசிக்கும் மகன். உங்களது கருத்தை எதிர்பார்கிறேன்.