சில துளிர்வுகள் - உதயா
எப்போதும் போல தெரியாம பண்ண தப்புக்கு அப்பா திட்டும் போது வரும் பயம் கொஞ்சம் மாறிரு இருந்தது. இப்போதெல்லாம் அப்பா திட்டுனா எரிச்சல்தான் வருகிறது, இதற்கு முன்னாடி அம்மா வைத்த குழம்பில் உப்பே இல்லையென்றாலும் ரசித்து உண்னவன், இப்போதெல்லாம் குழம்பு நல்லா இருந்தாலும் எனக்கு அந்த குழம்பு வேணும் இந்த குழம்பு வேணும் என்று கோவம் அடைந்து சண்டைப் போடுகிறான் . எல்லாத்துக்கும் காரணம் வயது காளைப் பருவத்தை தொட்டு இருந்தது . எப்போதும் போல இல்லாமல் இந்த முறை முகத்திலும் முடி முளைத்திருந்தது .
எப்போ பார்த்தாலும் அவன் கையினை செல் போன் கட்டிப்பிடித்துக்கொண்டே இருந்தது. அவன் அறையின் கதவு மூடியே இருந்தது. ஆனால் அவன் அறையின் லைட் மட்டும் இராத்திரி 11 மணி வரைக்கும் தூங்காமவே இருந்தது . தினமும் அவன் முகம் கண்ணாடியில் சிரிக்கும். குறைந்தது அரை மணி நேரமாவது சீப்பு தலையோடு உறவாடும். அம்மா என்ன வேலை சொன்னாலும் எனக்கு வேலை இருக்குது என்றே அவனிடம் பதில் பிறக்கும். முன்பெல்லாம் அவன் தம்பி போன் எடுத்து விடையாடும் போது எதுவும் சொல்லாம இருப்பான். ஆனால் இப்போதே அவன் தம்பி போன தொட்டாலே அவன் கோவப்பட்டு அடித்து விடுகிறான்
அவன் ஆசையாய் காதலித்த அவன் காதலி எதோ ஒரு காரணத்தால் அவனை விட்டோ அல்லது உலகை விட்டோ சென்றுவிடுகிறாள் . அந்த இளம் வயது காதல் அவனை வெகுவாக தாக்கி விட்டது. அவன் மனம் குரங்காகி போகிறது எண்ணக் கிளைகளில் தாவிக்கொண்டே இருக்கிறது . காரணம் அறிந்து அறிவுரை கூறிய தாய் மீதும் தந்தை மீதும் நண்பர் மீதும் வெறுப்பு வந்து விட்டது. அவனுக்குஅடுத்த வாரம் வரும் தேர்வு ஆனால் அவன் படிக்கவே இல்லை . மரணத்தின் கதவினை அவன் மனம் தட்டுகிறது. மடிந்த பின் எது நடந்தால் என்ன என்ற பக்குவதற்கு மனம் பரிணாமம் அடைகிறது
வயது என்னமோ 18 - லிருந்து 22 ற்குள் ஆனால் அவன் மனதில் தான்தான் வாழ்வில் நிறைய இன்னல் அனுபவித்தவன் என்று எண்ணம் . தனக்குள் தன்னை பற்றி வெவ்வேறு உயர்ந்த எண்ணம் கிட்ட தட்ட எனது கணிப்பு சரியாக இருந்தால் மாகான் என்றுதான் சொல்லவேண்டும். அவன் ஒரு கவிஞ்சனாகிறான்
அவன் மனதில் மட்டும் தான் எழுதுவதெல்லாம் தத்துவம் என்கிறான். மீண்டும் அவன் பாதை மாறுகிறது
மரணமே தீர்வாகிறது. சரி இன்றே செத்துவிட வேண்டும் என எண்ணி அதி காலை 4 மணிக்கு கிளம்புகிறான்.
முடிவெடுத்து கிளம்பிய அவனுக்கு எப்படி சாவது என்றுதான் தெரியவில்லை. யோசித்துக்கொண்டே நடந்தான் மணி 8 -ஐ நெருங்க மெதுவாக பசி வயிற்றை கிள்ள தொடங்கியது . அவன் சட்டையில் மீதமிருந்த கடைசி 20 ரூபாய் எடுத்து அங்கு தெருவோரம் பனியாரம் சுட்டு விற்கும் அந்த பாட்டியின் கடை நெருங்கி நான்கு பனியாரம் வாங்கி உண்ண தொடங்கினான். ஏனோ அந்த பாட்டி அவன் உண்ணுவதை பார்த்து கண்ணீர் வடித்தாள். அவன் காரணம் கேட்க அவள் சொல்ல தொடங்கினாள்
பாவம் அவள் கணவன் திருமணமாகிய சிறு வயதிலே இறந்துவிட்டானாம். தான் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய பிள்ளையும் அவன் மனைவி மக்களோடு அவளுடன் சண்டை போட்டுக்கொண்டு எங்கோ சென்றுவிட்டானாம் . அவன் போகும் போது என் பேரனுக்கு 5 வயது . ஆனால் இப்போ உன் வயது இருக்கும் என்று சொல்லி அழுதாள். அவன் மனம் ஒரு கணம் வாழ துடித்தாலும் மறுகணம் மரணத்தையே நாடுகிறது . சாப்ட பனியார பணத்தையும் அந்த பாட்டி வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்
எவ்வளவோ சொல்லியும் அந்த பாட்டி பணம் வேணாம் என்றே சொல்லுகிறாள். காரணம் அவனையே தன் பேரனாக நினைப்பதால். சரி எப்படி சாகலாம் என்று அவன் மறுபடியும் சிந்தித்துக்கொண்டே நடக்கிறான் மாலை நேரம் வந்து விட்டது எல்லோரும் பள்ளி ,கல்லூரியை முடித்துவிட்டு நண்பர்களோடு பேசிக்கொண்டே ஆங்காங்கே கூட்ட கூட்டமாய் நின்ற படி உள்ளனர். எதையும் காணாது போல அவன் மீண்டும் நடக்கிறான். இருள் மெதுவாக இருக்கமாகியது . அங்கே தூரத்தில் தெரிந்த மலை மீது ஏறி குதித்து சாகலாம் என்று முடிவு செய்கிறான் .
மீண்டும் நடக்கிறான் மலை உச்சியை நோக்கி , அந்த மலை அடர்ந்த காடுகளை உள்ளடக்கியது என்பதால் அதில் சிங்கம் முதல் சிறு ஜீவன் வரை ஏனைய உயிரினங்கள் வாழ்வதால் அவன் அந்த இரவினை மரத்தின் கிளைகளில் தங்கியே கழிக்கிறான் காரணம் அவன் உயிரோடு இருக்கும் போது யாருக்கும் உணவாக விரும்ப வில்லைமற்று களைப்பு அவனை அதி வேகமாய் அணைத்திருந்தது. விடிகிறது ஒரு அழகான விடியல் ஆனால் அது அவனுக்கு இறுதி விடியல் என்ற எண்ணம். கண்களை கசக்கியவாறே தன் கண்களை திறக்கிறான். அங்கு முளைத்திருந்த சில தானியங்களை எலி சேகரிக்க ஒரு பாம்பு ஒன்று எலியை துரத்துகிறது. பாம்பு நெருந்துவதற்க்குள் அந்த எலி ஒரு மலைப் பொந்தில் புகுந்து விடுகிறது . மீண்டும் சிறுது நேரம் கழித்து வேறொரு வழியின் வழியே தன் உணவை தேடுகிறது.
தூரத்தில் மான்கள் புல்லினை மேய்ந்து கொண்டிருக்க சில வேட்டையர்கள் மானை துரத்த, மான் பிடிபடாமல் வேறிடம் சென்று மறுபடியும் மேய்கிறது. அப்போதுதான் அவனுக்கு புரிகிறது வாழ்க்கையின் அர்த்தங்கள். சரி வீட்டிற்கு போகலாம் நாமும் வாழ்ந்து பார்க்கலாம் என அவனுள் வாழும் ஆசை பிறக்கிறது . ஆனால்மிக பெரிய ஆபத்து காத்திருந்த . ஆம் அவனை உணவாக்கிக் கொள்ள காட்டின் ராசா மரத்தின் அடியிலே காத்திருக்கிறான் . இப்பொழு அவன் வாழ நினைத்தாலும் விதி அவனை வாழ விடுவதாய் தெரியவில்லை. ஏதோதோ சொல்லி கடவுளிடம் வேண்டுகிறான் அழுகிறான் தான் வாழ வேண்டும் என்று
மணித்துளிகள் நீண்டு கொண்டே செல்ல பயம் வெகுவாக அவனை அணைக்கிறது . எங்கோ தூரத்தில் யானைகளின் கூட்டு சத்தத்தில் ராசா பயந்து ஓட அவனும் ஓட்டத்தை தொடர்கிறான். ஆம் அவன் மனதின் மரண எண்ணமும் ஓடுகிறது
ஓட்டம் தொடரும் ......*** அவ்வப்போது ****
- உதயா