நீல(ள)க் கடல்


தினம்தினம்
உற்றுபார்த்துக்
கொண்டிருக்கிறது
அந்தக்கடல்
நானிருக்கும்
ஜன்னலை .

ஏதேதோ பேச
நினைத்து
ஒன்றுமே பேசாமல்
மீண்டும் திரும்பிச்
செல்கிறது.

இன்னமும் பேச
மிச்சமிருக்கிறது
இந்தஜன்ன்னல்
கம்பிகளுடன்

எழுதியவர் : rengarajan (4-Jul-10, 3:09 pm)
சேர்த்தது : rengarajan
பார்வை : 534

மேலே