இரவின் மடியில்
![](https://eluthu.com/images/loading.gif)
இரவின் மடியில்
மெல்லத் துயில்கிறது பகல்
மாலையின்
அழகிய ஓவியமாய் ....
மலரிதழில்
துயில்கிறது வெண் பனித்துளி
காலையில் மறைந்துவிடுவோம்
என்ற கவலையின்றி ...
நாள் முழுதும் உழைத்த உழைப்பாளி
உறங்குகிறான் கண்ணயர்ந்து
நாளையும் அந்த உழைப்பு
கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் ...
~~~கல்பனா பாரதி~~~