நிலம் - இன்றைய நிலை
நிலமெனும் நல்லாள் ... இனி என்ன ஆவாள்?
_____________________________________________
பச்சை வயல்கள் தேடி பூர்வீகம் சென்றேன்..
பார்க்கிறேன், இங்கும் , அங்கும் இடம் புலப்படவில்லை..
பளிச்சிடும் வயல்கள் யாவும் அடுக்கு கட்ட்டிடங்களாய் நிற்க!!! மனம் உறைந்தது!
சொந்தக் காலில் நில் ! என்பது வஜனம்----
சொந்த விவசாய நிலங்கள் மாடமாளிகைகளாக,
சொந்தமாய் இல்லாமல் அரிசிகூட இறக்குமதி செய்யும் நிலை கூடிய விரைவில்....
அன்று, தானியங்கள் சொந்த நிலங்களிலிருந்து
இன்று, ஒரு கைபேசி பொத்தானை அமுக்கி பல்பொருள் கடையிலிருந்து
நாளை, சொந்த வீடு உண்டு! சொந்தமாய் சமைத்து உண்ண தானியங்கள் இல்லை....
விவசாயிகள், வேலை வாய்ப்பு தேடி பட்டினத்திற்கு பிரவேசம் ..
விவசாயத்தை கவனிக்க ஆளும் இல்லை
விளைவை பற்றி யோசிக்க மனமும் இல்லை, நேரமும் இல்லை....
விளை நிலங்கள் யாவும் குடியிருப்ப்பு நிலங்களாக ,
மழை மீது குறை சொல்லி விவசாயத்தை துறந்தால் ?
மணியரிசி காணாமல் எதை உண்டு சுவைக்கப்போகிறோம்???
பூகம்பம், வெள்ளம் என, என்றோ கையேந்தும் நாம்---
தினமும் கையேந்தும் நிலை வந்திடுமோ????
தமிழ்நாட்டில், விருந்தினரை "சாப்பிடுங்கள்!" என உபசரிப்பது பண்பாகும்!
தானியங்களே இல்லையெனில், எதை சாப்பிட அழைக்க???
இன்றைய தலைமுறையினர், வாழை , தென்னை, மா மரங்களை கண்ணால் கண்டனர்...
இனி வரும் தலைமுறையினர,புகைப்படம், கணினி மூலம்தான் காண்பர்...
நிலத்தை பெண்ணோடு ஒப்பிடுகையில்,
தாயெனவும் ஆவாளே! அன்னமிடும் கையல்லவா??
அவளை பரிதவிக்க விடலாமோ????
திருமதி. மைதிலி ராம்ஜி