ஒத்தையடிப் பாதை

ஒத்தையடிப் பாதை
""""""""""""""""""""""""""""""""

அருகில் இல்லாமல் தூரத்தில்,
ஒரு கிராமம்...

கிராமத்துக்கும் கிராமத்துக்கும்...
சில மைல் தூரம்...

இரண்டையும் இணைப்பது,
ஒத்தயடிப் பாதை...

இன்று...
அனாதையாகக் கிடக்கிறது...
யாரோ...
போட்டுவிட்டு சென்றதுபோல்...!

ஒருகாலத்தில்...
பள்ளிக்கும் அந்தப்பாதை...!
சந்தைக்கும் அந்தப்பாதை...!
நல்லதுக்கும் அந்தப்பாதை...!
கெட்டதுக்கும் அந்தப்பாதை...!

இன்று...
நடக்க ஆளில்ல...!!

பாதையின் வழியில்,
இரண்டு காடு...!!

ஒன்று விவசாயக்காடு,
மற்றொன்று சுடுகாடு...!!!

ஊர் பெருசுங்க,
இளசுகளை பாத்துச் சொல்லுச்சாம்...

ஐயா...!
நாங்கதான் இந்த வெயில்ல,
காடு கரையின்னு கஷ்ட்டப்படுறோம்...!

நீங்களாவது...
படிச்சி பெரிய்ய வேலைக்கு,
போகனும்னு...!!

யாரு கண்ணு பட்டுச்சோ...!

எல்ல பயலுகளும் ஒழுங்கா,
படிச்சானோ இல்லையோ,
வெளியூர்க்கு போயிட்டான்....
வேலைக்கு...!!!

இப்ப...
சுடுகாடு சொல்லுச்சி,
விவசாயக்காட்ட பாத்து...

முந்தில்லாம்...
உனக்கு வேலையதிகம்...!
என்க்கில்லை...!!

இப்ப...
எனக்கு மட்டும்தான் வேலை...!
அவ்வப்போது...!!

மீதமிருக்கும்...
ஊர்ப் பெருசுகளை எரிக்க...

இதுக்காவது...
பயன்படட்டும் அந்த...
"ஒத்தயடிப்பாதை"


இவண்
✒ க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (22-Oct-15, 9:20 pm)
சேர்த்தது : க முரளி
பார்வை : 691

மேலே