வேலை வேண்டி
விழித்திருக்கும் இரவிற்கு துணையாய்
நானும் விழித்திருக்கிறேன்
விடிகின்ற பொழுதிலாவது - நான்
வேலை பெறுவேன என்று
காலை ஆறு மணிக்கு
எழுந்து டி கடையில் பேப்பருக்காக
காத்திருக்கிறேன்
நேற்றைய நிலையை அறிய அல்ல
இன்று எத்தனை இடங்களில்
வேலை இல்லை என்றறிய
ஒரு நாளைக்கு
மூன்று இடங்களுக்காவது
வேலை தேடி செல்வேன்
வேலையில் இருக்கும் உனக்கு
இது சாதாரணமாக தோன்றலாம்
எனக்கோ இதுவே இலக்கு
செல்லும் இடங்களில் எல்லாம்
வேலை இருந்தும் எனக்கு
இல்லை
கரணம் சில - அதில்
ஒன்று முன் அனுபவம்
வேலை தேடுவதற்கு அனுபவம்
பெற்ற என்னிடம் இல்லை
வேலை பார்த்த அனுபவம்
வேலை தர வேண்டுவது
இருசக்கர வாகனம்
இரண்டு ரூபாய் டிக்கேடிற்காக
நடந்து செல்லும் என்னிடம்
எப்படி
இருசக்கர வாகனம்
இவற்றை பெறவாவது
வேண்டுகிறேன் வேலை ......