மனக்குறளி கவிதை

*
உன்னை எங்கோ தேடினேன்
நீ ரோஜா பூவில் ஒளிந்திருப்பதாக
சொன்னது வண்டுகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ ஆப்பிள் பழத்தில் ஒளிந்திருப்பதாக
சொன்னது குருவிகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ கோவைப் பழத்தில் ஒளிந்திருப்பதாக
சொன்னது கிளிகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ தேங்காயில் ஒளிந்திருப்பதாக
சொன்னது காக்கைகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ திராட்சையில் ஒளிந்திருப்பதாக
சொன்னது எறும்புகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ தாழம்பூவில் ஒளிந்திருப்பதாக
சொன்னது ஒணான்கள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ கோயில் மண்டபத்தில் ஒளிந்திருப்பதாகச்
சொன்னது புறாக்கள்.
உன்னை எங்கோ தேடினேன்
அப்பொழுது என்னுள்ளிருந்து ஒலித்தது
அட, பைத்தியக்காரா….!
அவள் உன்னிதயத்தில் ஒளிந்திருக்கிறாள்
பாரடா என்று உண்மையைச்
சொன்னது மனக்குறளி.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (23-Oct-15, 10:25 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 80

மேலே