அவர்களற்ற இரு தினங்கள்
இரண்டு தினங்கள் தான் அவன் வரவில்லை
எத்தனை எத்தனை மாற்றங்கள்
அவனது வருகை இல்லாததன் தாக்கம்
கடைத்தெரு முதல் ஒவ்வொரு வீட்டின் வாயில்கள் வரை மாறுதலை காண்பிக்கிறது
இரு தினங்கள் தானே அவன் வரவில்லை
அதற்குள் பாலிதீன் பைகளில் முடிக்கப்பட்ட
பொன்முடிப்புகளாய் காத்திருக்கிறது
வீடுகளின் வாயில்கள் தோறும் குப்பை பொட்டலசங்கள்
கடைத்தெருவில் ஆங்காங்கே
குவித்து வைகக்கப்பட்ட குப்பைகளின் கூடாரங்கள்
நாற்றத்தை பரப்ப
ஆங்கு முகாமிட்ட ஓருயிரிகள் யாவும்
சப்தமிட்டு எதிர்நோக்குகிறது அவா்களது வருகையை
குப்பை வண்டியும் துப்புரவாளா்களும்