கல்யாணம் அன்றும் இன்றும்

கல்யாணம் அன்றும் இன்றும்..... ஒரு கண்பார்வை
---------------------------------------------------------------------------

ஒரு 25 வருடங்களுக்கு முன்பு, கல்யாணம் என்றாலே அது மூன்று நாட்கள் விசேஷமாக இருக்கும் ... வீடே கலை கட்டும். வீடு சிறியதோ, பெரியதோ அது பொருட்டல்ல.... ஒரு புறம் மருதாணி அமர்க்களம், மற்றொருபுறம் அப்பளம் இடுதல், கை முறுக்கு சுத்துதல் என்று வீடே விழா கோலமாய் காடசி அளிக்கும்!!!

அதோடு இல்லை! சத்திரத்தில் கோலம் போடுதல், மாவிலை கட்டுதல் என்று அதன் அழகே அழகு... ஜானவாசம் ( மாப்பிள்ளை அழைப்பு ) அன்று காலையே பெண் வீட்டினர் சத்திரத்தில் ஆஜர் ஆவர்... உள்ளே நுழைந்தவுடன் ஒரு பில்ட்டர் காபி( துணியில் வடிப்பர்) கிடைக்கும் பாருங்கள் அதன் சுவையோ சுவை....

நிச்சயதார்தம் முன்பு கோயிலுக்கு சென்று வரும் பொழுது ஜானவாச காரில் ஊர்வலம்... சிறிய பசங்கள் யாவும் அதில் ஏறிக்கொள்வர்.. ஊர்வலம் மிக மெதுவாக, காரின் முன்புறம் மேல தாளம், பெட்ரோமாக்ஸ் விளக்கு என்றும் ஆண்கள் முன் செல்வர். பின்புறம் பெண்களின் பட்டாளம் அழகாய் பட்டு புடவை, பாவாடை, தாவணி என்று கையில் சீர் வரிசைகள் ஏந்தி வருவர்.... பிறகு சத்திரம் வந்து அடைவர். நிச்சயதார்த்தம் முடியும்... பின்பு வெற்றிலை பாக்கு போடும் வேலை ஆரம்பிக்கும் .. ஒரு புறம் ஆண்கள் சீட்டு விளையாட்டில் மும்முரம்.. பெண்கள், வெற்றிலை பாக்கு போடுவதில் ஆர்வம், பழைய கதைகள் பேசி, பாட்டு பாடியும் மகிழ்வர்...

அன்று இரவோ ஒரே அரங்கில், அனைவரும் ஒரு ஜமக்காளத்தை விரித்து விடிய விடிய கதைகள் பேசி பின்பு ஒரு மணிநேரம் தூங்கி முடிவதற்குள், மேள சப்தம் கேட்க ஆரம்பிக்கும், காபி மனமும் மூக்கை துளைக்கும்... அன்று முழுவதும் கொண்டாட்டம்தான் சிறுவருக்கும் பெரியவர்களுக்கும்...

இன்றைய காலகட்டத்தில்... எல்லாமே நம் கையை விட்டு போய் விட்டது... எல்லாவற்றிற்கும் ஆட்கள் நம் கையால் செய்யும் வேலைகள் மிகவும் கம்மி.... சத்திரத்தில் பந்தகால் நடுவதிலிருந்து கட்டு சாதம் கட்டும் வரை எல்லாம் கான்ட்ரட் தான். வாசலில் கோலம் போடவேண்டியது இல்லை, வெற்றிலை பாக்கு கவர் போட வேண்டாம்... இது எல்லாம் பரவில்லை வரும் விருந்தினருக்கு ஹோட்டல் அல்லது விடுதியில் அறை பதிவு. கல்யாணத்திற்கு செல்வது ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதுபோல் ஆகிவிட்டது...

நாங்கள், போன வருடம் பெங்களூர் சென்றோம் எங்கள் நெருங்கிய உறவினர் திருமணத்திற்கு... எங்களுக்கு ஹோட்டல் அறை புக் செய்திருந்தனர்... நாங்கள் சத்திரத்திற்கு செல்ல முடியவில்லை ஏனெனில், மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் வேறொரு ஹோடேலில் .. சரி என்று நாங்கள் வரவேற்பிற்கு செல்லலாம் என்று மாலை 6 மணிக்கு சென்றால் அன்கு ஒருவரையும் காணோம்.. அப்பொழுதுதான் மேடையை அலங்கரித்து வந்தனர்... பின்பு 7 மணி அளவில் மாப்பிள்ளை அப்பா, அம்மா வந்து இறங்கினர். அப்பாடா என்றிருந்தது.... பிறகு 7.30 மணிக்கு மாப்பிள்ளை பிரவேசம்....

இரவு திரும்பி நாங்கள் எங்கள் அறைக்கு சென்றுவிட்டோம் . மறுநாள் முஹுர்த்தம். முடிந்ததும் உடனே
புரப்பட்டாயிற்று..முடிந்தது...

அன்று இருந்த மகிழ்ச்சி, ஆரவாரம் எதுவும் இல்லை.. ஆனால் செலவிற்கு ஒன்றும் பஞ்சம் இல்லை... என்னை பொறுத்த வரையில் மன திருப்தி இல்லை என்றுதான் சொல்லுவேன்..

இந்த தலைமுறையினர் அன்றைய கல்யாண நிகழ்ச்சிகளை சந்தோஷங்களை இழந்துவிட்டனர்...மீண்டும் அந்த நிலை வருமோ??? சந்தேகம் தான்...!!!!

திருமதி. மைதிலி ராம்ஜி

எழுதியவர் : திருமதி.மைதிலி ராம்ஜி (23-Oct-15, 4:40 pm)
பார்வை : 367

மேலே