மகாகவியோடு ஒரு மாலை நேரம் -பாகம் - 3- சந்தோஷ்

வணக்கம் தோழர்களே...!

இந்த கட்டுரைத் தொடரை எழுத்து தளத்திலும் முகநூலிலும் எனது அபிமானத்திற்குரிய தோழர்கள் ..வாசித்து.. வரவேற்று இத்தொடரை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்வது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் ..மனநிறைவையும் தருகிறது. மிக்க நன்றி தோழர்களே...!


அன்புத் தோழர்களே........!!

மகாகவி ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் விழாவில் நமது எழுத்து தளத்திலிருக்கும் தோழர் சிறுகதை திலகம் பொள்ளாச்சி திரு. அபி அவர்கள் ஆற்றிய வாழ்த்துரை மிகவும் கவனிக்கதக்கது.
உரையில் தோழர் குறிப்பிட்ட மிக முக்கிய விடயங்களை இக்கட்டுரையில் பகிர விரும்புகிறேன்.“ தமிழ்தாத்தா உ.வே.சா விற்கு பிறகு சீவக சிந்தாமணி உள்ளிட்ட நூல்களையும் ஆய்வு நூல்களையும் உருவாக்கிய வையாபுரிப் பிள்ளையைபோல திரு, அகன் விளங்குகிறார் “ என சரியான புகழ்மாலையோடு எழுத்து தள தோழர்களின் சார்பாக தோழர் அபி அவர்கள் நம் தளத்திலுள்ள தோழர்களின் படைப்புகளை நூலாக்க முயற்சியெடுத்து வெற்றிகரமாக வெளியீடு செய்தவரும திறமையாளர்களுக்கு விருதளித்து வருபவருமான தோழர் அகன் அவர்களுக்கு நன்றியுரைத்தார்.

மேலும், சென்றாண்டு வெளியிட்ட நூல்களின் பட்டியலையும்.. இந்த விழாவில் வெளியிடப்படும் நூல்களையும் அதன் சிறப்புகளையும் எடுத்தரைத்தது... எழுத்து தள தோழர்களுக்கும்.. தளத்தில் அல்லாத கவிஞர்களுக்கும் அறிவிக்கும்படியாக இருந்தது பெருமைக்குரியதாகவும் நன்றிக்குரியதாகவும் இருந்தது.

விருது பெற்ற தோழர்களுக்கு “இம்மானுடத்தின் வழக்கறிஞர்களாக தங்கள் பாதையை மென்மேலும் செம்மைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கூடிவந்துள்ளது. தமிழ்சார்ந்த சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள்,இந்த சமூகத்திற்கான தமிழை எழுதி,எழுதி அய்யா தமிழன்பன் அவர்களைப் போல சர்வதேச உச்சம் தொடவேண்டும்.” என தனது ஆசையை அறிவுரையாக தோழர் அபி எடுத்தரைத்த விதம் அருமை.

மிக முக்கியமாக.. எழுத்தாளர்கள் ஒடுக்கப்படும்/ அடக்கிவைக்கப்படும் இன்றைய சூழ்நிலையை எடுத்துரைத்து.. ஓர் எழுத்தாளராக....தனது கண்டனத்தையும்.. ஆதங்கத்தையும் இந்த விழாவில் பதிவுசெய்தது எழுச்சி............... எழுச்சி..... ..புரட்சி தூறல்...!

தோழரின் இந்த கண்டனத்தில் மிகவும் நான் கவனித்து.... ஏற்றுக்கொண்டது இதுதான்.. “உண்ணும் உணவு முதல், உடுக்கும் உடை வரை வரையறைகளை விதிப்பதற்கும், ஒற்றைக் கலாச்சார விலங்கில் நம்மைப் பிணைப்பதற்கும் நாம் யாருக்கும் அதிகாரத்தைக் கொடுக்கவில்லை..என்பதை கருத்துரிமைகள் மீது கட்டாரியைப் பாய்ச்சுகிறவர்களுக்கு நாம் உணர்த்த வேண்டும்.பகுத்தறிவின் துணைகொண்டு,ஏற்றத் தாழ்வற்ற மனிதகுல விடுதலைக்கான பொதுவுடமையை அடையும்வரை,இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பாற்றவேண்டிய பொறுப்பும் அக்கறையும், படைப்பாளர்களாகிய நமக்குண்டு.” தோழரின் உரையில் வீச்சும் .. கருத்தின் ஆழமும் மெய்சிலிர்க்க வைத்தது.
(தோழர் ஆற்றிய முழுமையான உரை எழுத்து தளத்தில் எண்ணம் பகுதியிலும்.. முகநூலிலும் பகிரப்பட்டிருக்கிறது. . வாசித்து பார்க்கவும் தோழர்களே.)விழாவை தொகுத்தளித்த கவிஞர் கவிமுகில் ஒவ்வொரு அறிஞர்களும் தலைவர்களும் உரையாற்றும் இடைவெளியில் மகாகவி ஈரோடு தமிழன்பன் கவிதைகளை மிக அழகாக வசீகரமாக வாசித்து கைத்தட்டல்களை பெற்றார்.


கவிஞர் பழனிபாரதி வாழ்த்துபா பாடியது மிக அற்புதம்,

நமது எழுத்து தளத்திலிருக்கும் மரபுமாமணி ஐயா திரு. காளியப்பன் எசேக்கியல் அவர்களுக்கு பயனாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது ( ஐயா எழுதிய வாழ்த்து பா தனி பதிவாக பதியப்படும்.)

இதனிடையே......... நூல்கள் வெளியீடு செய்யப்பட்டது.
முதலில் மகாகவி ஈரோடு திரு, தமிழன்பன் ஐயா எழுதிய ” திசை கடக்கும் சிறகுகள் “ நூலை இனமானப் பேராசிரியர் திரு. அன்பழகன் வெளியிட .. தமிழர் தலைவர். ஆசிரியர் தோழர். திரு. கி.வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இதனை அடுத்து ..நமது தோழர்கள் அனைவராலும் எழுதப்பட்ட படைப்புகளை.. நம் எழுத்து தளத்தின் தோழர்கள் .. திரு. ஹோசப் ஜூலியஸ், திரு. பிரேமா பிரபா.. திரு. கருணாநிதி ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட்டு.. தோழர் திரு.அகன் ஐயாவினால் தொகுக்கப்பட்ட “ தொலைந்து போன வானவில் :” நூல் பேராசிரியரால் வெளியிடப்பட்டன.. நிகழ்வின் போது மொழிப்பெயர்த்த தோழர்களும் . நூலின் தொகுப்பாசிரியரான தோழர். அகன் அவர்களும் உடன் இருந்தனர்.

நமது தோழர். திரு.பழனிகுமார் எழுதிய ”நிலவோடு ஓர் உரையாடல்” நூலை பேராசிரியர் பெருந்தகை வெளியிட மகாகவி பெற்றுக்கொண்டார். நிகழ்வின் போது நூலாசிரியரான திரு. பழனிகுமார் ஐயாவும் .தோழர் திரு அகன் ஐயாவும் மேடையில் இருந்தனர்.

அடுத்த நூலாக நமது தளத்திலிருக்கும் தோழர் திருவாளர் கோனீஸ்வரி பட்குணரஞ்சன் எழுதிய “ கனவோடு புதைந்தவர்கள் “ கவிதை நூல் வெளியிடப்பட்டன. பேராசிரியர் வெளியிட மகாகவி தமிழன்பன் ஐயா பெற்றுக்கொண்டார். நூலின் ஆசிரியர் கனடாவில் வசிப்பதால் நிகழ்வில் கலந்துக்கொள்ள இயலவில்லை.

அடுத்த நூலாக நமது எழுத்து தள தோழர்கள் திரு. கவிஜி மற்றும் திரு. கனா காண்பவன்( தாகு) ஆகியோர் தொகுத்தளித்த நூலான ”மழையும் மழலையும்” பேராசிரியர் திரு. அன்பழகனால் வெளியிடப்பட.. மகாகவி கரங்களால் பெறப்பட்டன். நிகழ்வில் தோழர் அகன் ஐயாவும் .. நூலாசிரியர்களான தோழர் கோவை. கவிஜியும் .. தோழர் தாகுவும் மேடையில் இருந்தனர். ”இவ்விருவரும் விரைவில் நிச்சயம் உச்சம் தொடுவார்கள் ” என பெருமிதத்தோடு மேடையிலிருந்த அறிஞர்களிடம் கூறினாராம் அகன் ஐயா..!

நமது தளத்திலுள்ள படைபபாளிகளால் எழுதப்பட்டும்...மொழிபெயர்க்கப்பட்டும்...தொகுக்கப்பட்டும் தயாரிக்கப்பட்ட நூலகளை கனல் கவிஞர் திரு.இன்குலாப்... தோழர் திரு, மகேந்திரன்.. அறிஞர் சிலம்பொலி திரு. செல்லப்பன். நீதிநாயகம் திரு..கே. சந்துரு மற்றும் பிரபல கவிஞர்கள் ஆகியோர் முன்னிலையிலும்.. ஒரு பெரும் இலக்கிய ஆர்வலர்கள் கூடிய அரங்கிலும் ...ஆசிரியர் கி.வீரமணியோடு பேராசிரியரின் கையால் வெளியிடப்பட்ட நூல்களை மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களால் பெறப்பட்டதுமன்றி நமது தோழர்களை தோழர் அகன் அவர்களால் நூலாசியாராக மேடையேறச் செய்து..அறிஞர் பெருந்தகைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிகழ்வு.. எத்தகைய உற்சாகத்தை , உத்வேகத்தை கொடுத்திருக்கிறது என்றால் அதை சொற்களால் அலங்கரிக்க இயலாது.

அதிவேகமாக ஒடத்துடிக்கும் புரவிக்கு அதிக ஊட்டச்சத்து கிடைத்துவிட்டால் அதன் வேகம் மின்னல் வேகம் தானே......!


சரி தோழர்களே......!
அடுத்த பாகத்தோடு கட்டுரை நிறைவுப்பெறும்..................!

அடுத்த பாகத்தில்....இடம்பெறும் அம்சங்கள் : .

** விருது பெற்றவர்களின் பட்டியல்.
**மகாகவியை குறித்து அறிஞர்கள்.... தலைவர்கள் பேசிய ஒருசில குறிப்புகள்
**மகாகவி பேசியபோது நான் கவனித்த ஒரு நிகழ்வு..
மற்றும்
**விழாவின் இறுதி நேரத்தில் சந்தித்த தோழர் யார் ?
**விழாவில் அகன் ஐயா வழங்கிய புத்தகங்களின் விபரம்

உடன்...
நான் ஏன் இந்த கட்டுரை எழுதுகிறேன்...........?


**

நன்றி தோழர்களே........!!

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (23-Oct-15, 2:06 pm)
பார்வை : 199

சிறந்த கட்டுரைகள்

மேலே