பொன் மொழிகள்
* பொய்களால் தடவிக் கொடுப்பதைவிட உண்மையால் அறைவதே மேலானது.
* பிறருக்குப் பயன்படுங்கள். பிறரால் பயன் படுத்தப் படாதீர்கள்.
* முதிய தலைமுறையைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு இளைய சமுதாயத்தைக் குறை சொல்ல ஆரம்பிக்கும்போது உங்களுக்கு நடுத்தர வயது.
* முன்னேற்றம் என்பது ''இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது தான்'' என்று நினைக்கும் கால கட்டம் தான் முதுமைப் பருவம்.
* உங்களுக்கு மூக்கின் மேல் கோபம் வரும்போது,வாயை மூடிக் கொள்ளுங்கள்.
* நான்மறையைக் கற்றவனல்ல ஞானி. 'நான்'மறையக் கற்றவன் தான் ஞானி.
* உறவால் வரும் அன்பைவிட அன்பால் வரும் உறவே புனிதமானது.
* விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல.
* மனிதன் தான் செய்யும் தவறுகளுக்குச் சிறந்த வக்கீலாகவும்,
மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீதிபதியாகவும் இருக்கிறான்.
* பலமான மழை பெய்யும்போது லேசான மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டாதே. உறுதியான குடை வேண்டும்.