ஆன்லைனில் பொருட்கள் வாங்குவோரின் கவனத்திற்கு

# ஆன்லைனில் பொருட்கள் வாங்குவோருக்கு#

- குறிப்பிட்ட ஒரு தளத்தில் மட்டும் தேடாதீர்கள். ஒரு கூகுள் தேடலில் பிற தளங்களிலும் விலை என்னவென்று பார்த்துவிடுங்கள்.

- கடையில் வாங்குவதை விடக் குறைந்த விலை (அனுப்பும் செலவு உட்பட) என்றால் மட்டுமே ஆன்லைனில் வாங்கலாம்.

- உங்கள் வங்கிக்கணக்கின் வழியாக வாங்காமல் கடன் அட்டை வழியாக வாங்கினால் சில பல சலுகைகள் இருக்க வாய்ப்புண்டு. மறக்காமல் கடன் அட்டை பாக்கியை செலுத்தி விடவேண்டியது முக்கியம்.

- உங்கள் கடன் அட்டை விவரங்களை சேமிக்கவா என்று கேட்டால் வேண்டாம் என்று மறுத்துவிடுங்கள். தவறாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்றாலும் உங்கள் போனை வைத்து விளையாடும் குழந்தைகள் எதையாவது வாங்கிவிடும் வாய்ப்பிருக்கிறது.

- பிராண்டட் பொருட்களை ஆன்லைனில் நம்பி வாங்கலாம். பிற பொருட்களை நண்பர்கள் உபயோகித்து நன்றாக இருப்பதாக சொன்னால் மட்டும் வாங்குங்கள்.

- ஸ்மார்ட்போன் போன்றவற்றை கடைகளில் சென்றோ வைத்திருக்கும் நண்பர்களிடம் வாங்கியோ தொட்டு உணர்ந்து பிறகு வாங்குங்கள்.

புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்து வாங்கும் முடிவுகளை எடுக்க வேண்டாம்.

- பண்டிகைக்கால தள்ளுபடிகள் இங்கேயும் உண்டு. காத்திருந்தால் பணம் மிச்சம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

- பொருள் குறித்த சந்தேகம் இருந்தால் பொருளைக் கையில் வாங்கி விட்டுப் பணம் தரும் முறையைத் தேர்வு செய்யலாம். ஆனால் பொருள் வரும்போது கையில் காசு இருக்கவேண்டும்.

- பொருள் எங்கே வந்து கொண்டிருக்கிறது என்று ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கும் வகையில் படம் போட்டிருப்பார்கள். அந்த வசதிகளை உபயோகியுங்கள்.

- பொருள் வீடு வந்து சேர்வதற்குள் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ரத்து செய்யலாம். அதன் பிறகும் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பித் தந்து விட்டலாம். யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள்.

- கிட்டத்தட்ட எல்லாத் தளங்களும் திருப்தி இல்லாவிட்டால் வாங்கிய பொருட்களைத் திரும்ப எடுத்துக் கொள்கின்றன. அப்படி ஒரு வசதியைத் தரும் தளத்தில் மட்டும் வாங்குங்கள். அவர்களே வீடு தேடி வந்து எடுத்துக் கொள்கிறார்கள். பணத்தையும் திருப்பி விடுகிறார்கள். நான் பலமுறை செய்திருக்கிறேன்.

- கடைசியாக, வந்து சேர்ந்த பொருட்களைப் பிரிக்கும்போது அதை உங்கள் மொபைலில் வீடியோ பிடித்துக் கொள்ளுங்கள். உடைந்தோ அல்லது உள்ளே ஒரு செங்கல்லோ இருந்தால் நம் கையில் ஒரு ஆதாரம் இருப்பது நல்லது.


- ஷான்.

எழுதியவர் : (23-Oct-15, 8:40 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 152

மேலே