நிமிர் வளர்ச்சி

இதிகாசம் எமதென்றும்
முதல் குடி நாம் என்றும்
போதும் போதும் இந்த
கலாச்சார கலாட்சேபம் !

இன்றைய சமூகத்தின்
ஏற்றத்தை எண்ணிப்பார்
தன்னிறைவுக்கு துடிக்கும்
நம் தேசத்தின் கனவைப்பார் !

தேய்பிறை வளர்பிறை என்ற
பழைமையை தள்ளி வைத்து
பூமியின் நிழல் என்ற
விஞ்ஞான விரிவைப்பார் !

ஆணும் பெண்ணும்
சரிநிகர் சமானம் எனும்
பெண்ணிற்கு பூரண
உரிமையை வழங்கிப்பார் !

இயற்கை வளம் காக்கும்
மனித வளம் கொண்ட
தேசத்தின் நதியெல்லாம்
இனியாவது இணைக்கப்பார் !

விவசாய முன்னேற்றம்
விடியலின் ஆரம்பம்
ஊர் தோறும் விவசாய
உயிரோட்டம் கொடுத்துப்பார் !

வலிமைக்கு வாழ்வென்றால்
அறிவை வலிமையாக்க
ஒவ்வொரு குழந்தைக்கும்
கல்வியை வழங்கிப்பார் !

நெஞ்சில் உரமும்
நேர்மையில் மிகுதியும்
இன்றைய இளைஞனின்
உணர்வில் ஏற்றிப்பார் !

உள்ளத் தூய்மையையும்
சூழலின் பசுமையையும்
உன் தேசத் தலைமுறைக்கு
உரிமையாய் விட்டுசெல் !

ஒவ்வொரு நாளும்
வளர் மாற்றம் வேண்டும்
மணித்துளி தோறும்
நிமிர் வளர்ச்சி வேண்டும் !!!

எழுதியவர் : ஸ்ரீராமுலு (23-Oct-15, 8:05 pm)
பார்வை : 95

மேலே