சொன்னது என்னது
கற்றவன் நானென்றேன் சபையினில் - நான்
கற்றது எறும்பின் அளவுமில்லை
ஆத்திகன் நானென்றேன் கோவில்தனில் -இங்கு
நாத்திகன் எனைப்போல் யாருமில்லை !
நாத்திகன் இனி நான் என்றேன்- பெரும்
ஆத்திகன் பணியினை செய்கின்றேன்
மனிதன் பெரியன் நானென்றேன்-அணு
அளவும் மனிதம் உடையேன் இல்லை !
ஞானம் எனது உடமைஎன்றேன்- ஒரு
நாளும் அது போல் நடந்ததில்லை ..
காமம், வெகுளி அறுவென்றேன்-மையல்
மழையில் நனைவது வெறுப்பதில்லை !
கடந்தேன், ஆசைகள் பலவென்றென்- தினம்
புகழினைத் தேடியே அலைகின்றேன் !
மணந்தேன், மகிழ்ந்தேன் என்கின்றேன் -துணை
நலத்தை நினைத்து வாழ்ந்ததில்லை!
தொடுத்தேன் கணைகள் வீரமென்றேன்- வலி
என்னிலும் எளியோர் பெற காண்கின்றேன் !
என்னை அறிந்தவன் நானென்றேன்- இன்னும்
மனிதனாய் மாறிட முடியவில்லை !