நடைமுறைக் கவிதை

..................................................................................................................................................................................................
நெகிழ்ச்சி தருவது கவிதை என்றால்...
நெஞ்சத்து மலர்ச்சி புன்னகையாவது கவிதை என்றால்...
பேருந்துப் படிக்கட்டை
விட்டிறங்கும்
சேலையணிந்த குண்டுப் பெண்ணின் பாதத்துக்கும்
நடத்துனரின் விசிலோடு கூடிய விரல்
உதட்டுக்குச் செல்லும்
ஒவ்வொரு கட்டத்துக்கும்
ஒத்திசைந்த எதுகை மோனையில்
எழுத்தின்றி பிறந்தது
கவிதை..!