விருதளிப்பு விழாவில் மரபு மாமணியின் வாழ்த்துப்பா

அக்டோபர்..18, ஞாயிற்றுக்கிழமை, சென்னை மயிலாப்பூர் , கவிக்கோ மன்றத்தில் நடைப்பெற்ற.

ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் விழா
நூல்கள் வெளியீட்டு விழா
மற்றும்
’தமிழன்பன் விருது’ அளிப்பு விழாவில்

மரபு மாமணி திரு. எசேக்கியல் காளியப்பன் அவர்களின் வாழ்த்துப்பா அச்சிடப்பட்டு விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் தரப்பட்டது. அந்த கவிதை விழாவில் பங்கேற்க இயலாத மற்ற தோழர்களுக்காக இதோ
-----------------------------


கால், உங்கள் பதிவுகளைக் காட்டச் செய்வீர் !
...........................................................................
- எசேக்கியல் காளியப்பன்.



சொந்தமாம் என்று சொல்லிச் சீர், தளை, அடி,எ டுக்கச்
சந்தமாம் பல்லக் கேறிச் சங்கதிப் பட்டு டுத்தி
நொந்தெடுக் கின்றார் இந்த நோன்பு, நான் மரபைப் பற்றி
வந்தும தெதிரே நிற்கும் வாழ்த்துரை சற்றே கேளீர்..!


---

குடைபிடித்து நிலா, நிற்கக் குழுமும் விண்மீன்
கூட்டத்தைக் காணக்கண் கோடி வேண்டும் !
நடைபயிலும் அன்னங்கள் நாண வந்த
நங்கையரைக் காணவொரு கோடி வேண்டும்
படை எழுத்துப் பாவலரைப் பார்த்துப் பார்த்துப்
பரிசாக விருதளித்துத் தமிழன் பர், முன்
கொடை, நிகழ்த்தி அகனமர்ந்து நோக்கக் கண்கள்
கோடியுடன் நற்பலன்கள் கோடி வேண்டும் ! ........................(01)

கொடைகொடுத்து வாழென்றே இடியே யின்றிக்
கொட்டுகின்ற மேகமிதோ குமறும் காலம் !
விடைகொடுத்த வாலிபத்தைப் கைப்பி டித்து
வீறுனடை செய்மூப்பர் உடன், நடத்தித்
தொடைதட்டிச் சீர்கேட்டைத் துடைத்துப் போடத்
துடிக்கின்ற ஞான, நடை தொடரும் காலம்
படையெடுத்த விண்மீன்கள் தமிழன் பர், பால்
பருகிடவே தரையிறங்கிப் படரும் காலம் !..............................(02)

நாள்காட்டிக் கிழித்தவுடன் நெஞ்சை விட்டு
நகர்விருதாக் காலமிதா? இல்லை இல்லை !
கோள்காட்டி விருதாவாக் குலம், தழைக்க!
குறிப்பவர்கள் காலமிதா? இல்லை இல்லை!
ஆள்காட்டிச் செயல்காட்டி அவர்மேல் வைத்த
அபிமானம் தனைக்காட்டி அவர்பின் செல்லத்
தோள்கூட்டி வரவேற்கும், விருது கூட்டும் ( விருது வமிசாவழி)
தொடர்செயலாய் முடியாத தொண்டுக் காலம் ...........................(03)


காலங்கள் வரவில்லை போக வில்லை !
கவியன்பர் தமிழன்பர் அழகாய்ச் சொன்னார் !
சீலங்கள் வருமானால் போய்வி டாது !
சிந்திக்கத் தெரிந்தோர்கள் ஒப்புக் கொள்வர் !
கோலங்கள் ஆடையினால் அல்ல; நல்ல
குறிக்கோள்கள் மனிதர்க்குச் சிறப்புக் கூட்டும் !
கால், உங்கள் பதிவுகளைக் காட்டச் செய்வீர் !
காலங்களாய், அவைகள் நிலைக்கச் செல்வீர் ! ...........................(04)


நன்றி வணக்கம்.

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன். (24-Oct-15, 6:26 pm)
பார்வை : 120

மேலே