வளர்ந்த பிள்ளை

அன்னைப்பிசையும் கைசோற்றின் மணம்
வளர்ந்த பிள்ளைக்கு
உமட்டுகிறதைப்போல ,,
ஆக்கிவைத்த அன்பை எல்லாம்
எப்படி திணிக்கப் போகிறேன்,,
இதோ உனக்கு முன்னால்
இறக்கிவைத்துவிட்டேன்
தேக்கரண்டி கொண்டு நீயே
கொஞ்சம் கொஞ்சமாய் தின்றுதீர்த்துவிடு ம்ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"