வாழ்வும் சொர்க்க மாயிற்றே

காஞ்சிப் பட்டுச் சேலைக் கட்டிக்
***காதல் பார்வைப் பார்த்தாளே !
ஊஞ்ச லாடும் உள்ளந் தன்னை
***ஊற்றாய்ப் பொங்க வைத்தாளே !
தீஞ்சொல் லாலே யீர்த்தா ளென்னைத்
***தேனும் தோற்றுப் போயிற்றே !
வாஞ்சை யோடு கட்டிக் கொள்ள
***வாழ்வும் சொர்க்க மாயிற்றே !
( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
( தேமா தேமா தேமா தேமா
தேமா தேமா காய் )