காதல் ராட்சசி

ஆதாம் ஏவாளை
சந்தித்த போது
அவர் ரத்த நாளங்களில்
ஏற்பட்ட அதிர்வுகள்
என் மொத்த நாளங்களிலும்
எதிரொலிக்கிறது
உன்னை கண்டதில்


நீ இமை
திறக்க வேண்டாம்
இதழ் திறக்க
வேண்டாம்
முகம் காட்டு போதும்
முற்போக்கு சிந்தனையாளன்
முட்டாள் ஆவான்


நீ ஓரப்பார்வை
வீசும் போது
இதயத்தில் இடியே
இறங்கினாலும்
இதமாக தான் இருக்கும்

உன்னை சந்தித்த பின்
என் நாட்காட்டியின்
நாட்கள் குறைகிறது
கடிகார முட்கள்
பின்னோக்கி நகர்கின்றன


என் இமைகள்
பகலை இரவாகவும்
இரவை பகலாகவும்
நம்பி கொண்டு இருக்கிறது



உன் கண்கள்
சிவப்பதற்கும்
உன் கண்ணம்
சிவப்பதற்கும்
அர்த்தம்
அறியாதவனா நான் ???

முரண்பட்டது போதும்
கொஞ்சம் உடன்படு

உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
நிதர்சனமாய்
நித்திரை கொள்ள
முத்திரையாய்
ஒரு முத்தம் கொடு........♥

எழுதியவர் : வேலு வேலு (25-Oct-15, 12:59 am)
Tanglish : kaadhal raatchasi
பார்வை : 198

மேலே