இடப்பெயர்ச்சி

இடப்பெயர்ச்சி

இந்த இடத்துக்கு
உன்னை நகர்த்திக் கொண்டுவர
நானும்,
கீழே இறங்க வேண்டியதாயிற்று .

என்னைக் குறைக்க
நீ ஒன்றும் முயற்சி செய்யவில்லை குறைய சம்மதிக்க மாட்டேனென்று
நீ நினைத்திருக்கலாம் .

அறிவு கொடுத்த அறையில்
மனத்தில் வலி தான் .

என் சினம்
என்னைக் காக்கவில்லைதான் ,
உன்னைக் காத்தது .

இந்த இடத்துக்கு
உன்னை நகர்த்திக் கொண்டுவர
நானும்
கீழே இறங்க வேண்டியதாயிற்று…

எழுதியவர் : கனவுதாசன் (26-Oct-15, 1:41 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 43

மேலே