கிராமத்து வீடு
பிரமாண்ட தோட்டத்து
கிராமத்து வீட்டை விற்று
ஆசையுடன் நகரத்தில்
புதிதாய் நான் வாங்கிய என்
அடுக்குமாடி குடியிருப்பில்
ஏழாவது தளத்தில் உள்ள
எண் நூறு சதுரடி வீட்டில்
என் பாப்பா தேடுகிறாள்
எங்கே அந்த நிலவு என்று
அன்னை சோறு ஊட்டும்போதும்
ஆசையுடன் கேட்கின்றாள்
எங்கே அந்த திண்ணை என்று
அவள் கேட்ட அதை காட்ட
நிழல் படம் மட்டுமே உண்டு
என்னிடம் இன்று உண்டு