காதல் - 4
சத்தியமாக
எனக்கொன்றும்
தெரியாது ...
பாத்திரம்
துலக்கும் போதோ
துணி
துவைக்கும் போதோ
புழக்கடை
பெருக்கும் போதோ ...
எங்கேனும்
உன் அழகில்
கொஞ்சம்
சிந்தியிருக்கலாம் ...
எண் கண்களும்
எதேட்சையாக
எடுத்திருக்கலாம் ...
இதற்க்குப் போய்
என்னை
திருடன்
அது இது
என்கிறாய் ? ...