உன்னைத் தவிர

தெரு முனைகளிலோ
திருமண விழாக்களிலோ
எதிர்ப் பட நேர்ந்தால்
ஒரு வெற்றுப் பார்வை -

உறவுகள் சூழ்ந்திருப்பின்
முகந் திருப்பல்

பேசித் தீரும்
கட்டாயமெனில்
ஓரிரு வார்த்தைகளுக்குள்
அடங்கிவிடும்
நல விசாரிப்புகள் -

வீடு திரும்பும்வரை
என் நினைவிருக்குமா
உனக்கு ?

ஆனால்
நானுனக்கு நேரெதிர்
எனக்கு நினைவுகொள்ள
எதுவுமேயில்லை
உன்னைத்தவிர !

எழுதியவர் : நாராயணசுவாமி ராமசந்திரன் (26-Oct-15, 2:44 pm)
Tanglish : unnaith thavira
பார்வை : 671

மேலே