வாசகனாய்

என்னோடு உந்தன்
நினைவுகள் உறவை
வாழும் வரை என்னவனே
எந்தன் உடல் தீயில்
வெந்த பின்பும் என்
உயிர் பூமியிலேயே வாழுமடா

ஆயிரம் மைல்களுக்கு அப்பால்
நீ வாழ்ந்தாலும் எந்தன் நினைவு
எப்போதும் உந்தன் அருகில்
தான் வாழுமடா ...சட்டென்று
நீ திரும்பி பார் உன்னருகில்
தான் நான் இருப்பேன் எப்போதும்

பிரிவு நம்மை பிரித்த
போதும் நினைவு நம்மை
சேர்த்தே வைத்திருக்கிறது ...
என்னில் கவியாய் உன்னில்
வாசகனாய் ............
v.m.j.gowsi

எழுதியவர் : v.m.j.gowsi (5-Jun-11, 5:12 pm)
சேர்த்தது : m.j.gowsi
பார்வை : 280

மேலே