அம்மா - உயிரின் பாதி

நீ பிரியும் வேளை இது
நீர் வழியும் சாலை இது

கருவறையில் சுமந்தவளை கைகளில் சுமக்கிறேன்
தனிமையில் வாழ தகண மேடையில் எறிகின்றேன்
என்ன சாபம் இது
யார் செய்த பாவம் இது

கொசு கடிச்சாலே கொதிப்பியே
கொழுந்து விட்டு எறிகிறேன் அணைக்க வாயேண்டி
தெரியாம பட்டாலே தேம்புவியே
தெரிந்தே அடிக்கிறேன் தேத்த வாயேண்டி
நா உண்ண வரம் கேட்பியே
நாவரண்டு நிற்கிறேன் காக்க வாயேண்டி

கண்ணீர் தாங்க கண்கள் இல்லையே
கடைசியாய் பாரு
கண்ணுக்கு கண்ணாய் பார்த்தாயே
கண் திறந்து பாரு
கருவறையில் சுமந்தவளை கைகளில் சுமக்கிறேன்
கண்களில் நீர் இல்லை
என்ன சாபம் இது
யார் செய்த பாவம் இது

நீ பிரியும் வேளை யம்மா
நீர் வழியும் சாலை யம்மா

நீ பிரியும் வேளை யம்மா
நீர் வழியும் சாலை யம்மா

நீ பிரியும் வேளை யம்மா
நீர் வழியும் சாலை யம்மா

எனை தாங்கி தாங்கி ஏங்கி போனாலே
வினை வாங்கி உயிர் நீங்கி போனாலே
எனை வாங்கி போனாலே
என்ன சாபம் இது
யார் செய்த பாவம் இது

நீ பிரியும் வேளை இது
நீர் வழியும் சாலை இது

நீ பிரியும் வேளை இது
நீர் வழியும் சாலை இது

எழுதியவர் : கிருஷ்ணா (26-Oct-15, 9:55 pm)
பார்வை : 300

மேலே