காதல் குறுங்கவிதை தொடர் -10-முஹம்மத் ஸர்பான்

அன்பே!!
உன்னை மொழிகளில்
மெளனமாக்கி இறுகக்
கட்டிக்கொண்டேன்.

நெடுநாட்களாய்
அலைய விட்டு
தவறிழைத்து விட்டேன்.
உன்னருகில் இருக்கும்
போது குழந்தையாகிறேன்.

மடி மேல் தூங்க ஆசை
கேட்கத்தான் வெட்கம்.

நாழிகைகளும் நிமிடங்களாய்
மாறுகின்றது.
வலி(ழி)களும் தீராத காதலில்
கூந்தலில் மல்லிகை சூடி
கால் விரலில் மெட்டி போட்டு
உன்னை என்னில் கரைப்பது
எப்போது என்னவனே!!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (27-Oct-15, 8:56 am)
பார்வை : 122

மேலே