இறக்கப்போகிறேன் உன் அன்பு இல்லாமல்
![](https://eluthu.com/images/loading.gif)
விஷம் அமிர்தம் இரண்டும்
என் எதிரே உள்ளது...
எது விஷம்?
எது அமிர்தம்?
நீ அறிகிலாய்!
விஷத்தை
அன்போடு
ஊட்டுகின்றாய்!
இறக்கவில்லை
நான் உன் அன்பினால்...
விட்டு விலகி
சென்றாய் கோபத்தால்!
எடுத்து உண்கிறேன்
அமிர்தத்தை ஆனாலும்
இறக்கப்போகிறேன் உன்
அன்பு இல்லாமல்!...