சுவாசத்தால் சுமைகளை சூறையாடு 555
![](https://eluthu.com/images/loading.gif)
என் தோழியே...
நீ மலராய் இருந்து
உதிர்ந்தது போதும்...
முரசாய் அதிர்ந்து
முழக்கமிடு...
கண்ணீரால் கரைந்த அவலங்கள்
அழிந்து போகட்டும்...
சுமைகளை உன்
சுவாசத்தால் சூறையாடு...
தோல்விகளை அழிக்கும் அக்னி
கங்கையாய் அவதாரம்கொள்...
வெற்றி படிகள்
உன் பாதங்களில்...
சிகரமும் உன்
கைதொடும் தூரத்தில்...
தன்னம்பிக்கை உனக்கு
இன்னொரு கை.....