மண்ணில் மனிதம்

மண்ணில் பிறந்த மனிதர் நாம்
இன்று மனிதம் இழக்கின்றோமா?
நொடிக்கு நொடி மாறும் மனம்
பிறர் சொல் கேட்டு மாறும் மனம்!
சுயச் சிந்தனை செய்யா மனம்
எதிர்மறை எண்ணும் மனம்!
இன்று ஒன்று கூறும் மனம்
பிரிதொன்றை நாளை கூறும் மனம்!
மனிதர் என் நம் மனதை அடக்கவில்லை?

போதுமென்ற மனமே பொன் செய்யுமென்போம்
போதாது போதாதென்று பணத்தின் பின்னே செல்வோம்!
மனிதனின் சமத்துவம் உரக்கப் பேசுவோம்
ஏழைப் பணக்காரன் வித்தியாசம் கொள்வோம்!
காலம் பொன்னானது என்று அறிவோம்
அலைபேசியின் வலையில் விழுந்து காலத்தை வீண் செய்வோம்!
வெயில் நேரத்தில் மழையை வேண்டுவோம்
மழை காலத்தில் சூரியனைத் தேடுவோம்!
மனிதர் நாம் ஏன் மாயையில் வீழ்ந்தோம்?

வெற்றி பெரும் வேளை தன்னை போற்றுவோம்
தோல்வி காணின் பிறரை தூற்றுவோம்!
பிறர் தவறு செய்தால் தப்பு என்போம்
நாம் தப்பு செய்தால் தவறுதல் என்போம்!
தண்ணீர் குறைந்தால் தவித்து போவோம்
குழாழை மூட மறந்து நீரை வீணே தரையில் விடுவோம்!
ஆண் பெண் சரி நிகர் சமானம் என்போம்
பெண் ஒன்று பேசினால் ஆணவம் என்போம்!
மனிதர் நாம் இவ்வாறு மாறி போனோம்?

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (27-Oct-15, 9:27 pm)
Tanglish : mannil manitham
பார்வை : 376

மேலே