தாரை வார்த்தல்

தாரை வார்த்தல்
""""""""""""""""""""""""""""""

அவ பிறந்த வீட்டுலதானே,
நானும் பிறந்தேன்...!

அவளுக்கு பேர் வைத்து,
அழைத்ததுபோல் தானே...
என்னையும் அழைத்தீர்கள்...!!

மாலையில்...
பொழுது போகவில்லையெனில்,
அவளுக்கு...
என்னுடன் விளையாட்டு...!!!

அவள்...
சாப்பிட்டாளோ இல்லையோ,
மூன்று வேளையும்...
எனக்கு சாப்பாடு,
அவள் அளித்தால்...!

இப்படி,
சந்தோஷமாகத்தானே வாழ்ந்தோம்...!!

திடீரென்ற அவளுக்கு...
வயது வந்து நாளாகிறதாம்...!

இன்னொருவனுக்கு,
தாரை வார்க்க வேண்டுமாம்...!!

அதுக்குத் தேடுகிறீர்கள்... புதுமாப்பிள்ளையை...!!!

தேடி... தேடி...
அலுத்துப்போய்...!

யாரோ ஜோசியர் சொன்னார்னு...
மாப்பிள்ளை கிடைக்க வேண்டி...

பரிகாரம் என்ற பெயரில்...
ஊர் பொதுக்கோவிலில்...

வெட்டி...
கூறுபோட்டு...
குழம்பு வச்சி...

என்ன பலருக்கு,
தாரை வார்த்துட்டீங்களே... இலையில...!!!

அந்த சாமி சொல்லுச்சா...
என்ன கொல்லச் சொல்லி...

செத்தும் புலம்புகிறது...
அந்த "சின்ன ஆட்டுக்குட்டி"🐐

தின்றவர் வாயில் வரும்,
ஏப்பத்தின் வழியாக...!!!

இவண்
✒ க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (27-Oct-15, 3:12 pm)
பார்வை : 166

மேலே