நிசப்த நிறம் யாவும் நீயடி - காதலாரா

நிசப்த நிறம் யாவும் நீயடி - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மூன்றாம் ஜாம முடிவில்
விழிக்குள் வெடித்து
தேகம் முழுக்க பரவும்....உன்
முகத்தின் நிறமெல்லாம்...பெரும்
தவத்தின் வரமாய் நீளுதடி ...

சிவந்து சிரிக்கும்...உன்
நகத்தின் நடனங்கள்
யுகம் விரிக்கும்
ராகத்தின் மீதமென
மூங்கில் காடாய் மாறுதடி ...

அருகில் அசையும் ...உன்
துப்பட்டா மோதல்களில்
வேர் விடும் மோகத்தில்
பார் முட்டும் வேகத்தில்
நிசப்த தாகம் பிறக்குதடி ...

தோலுரித்த வானத்தில் ...உன்
உடை உடுத்திய மேகத்தில்
உடைந்து விழும் ஓர் துளிக்குள்
அடைத்து தைத்த அற்புதமாய்
கற்பக காதல் முளைக்குதடி ...

- காதலாரா

எழுதியவர் : காதலாரா ( இராஜ்குமார் Ycantu ) (28-Oct-15, 3:50 pm)
பார்வை : 145

மேலே