பழமொழி நானூறு காட்டும் கல்லாதார்

பழமொழி நானூறு காட்டும் கல்லாதர்
முன்னுரை
நாட்டுப்புற மக்களின் இன்றியமையாத வழக்காறுகளுள் ஒன்று பழமொழி. இம்மக்களின் பண்பாடு, நாகீகம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கு பழமொழிகள் பெரிதும் துணைபுகின்றன. தமிழில் பழமொழிக்கு மூதுரை, முதுமை, மொழிமை, முன்சொல், முதுசொல், பழஞ்சொல் எனப் பல பெயர்கள் உண்டு. பழமொழி என்பது உலகுக்கு உணர்த்தும் உண்மையை ஒரு சிறிய வாக்கியத்தின் மூலம் சுருக்கிக் கூறுவதாகும் என்று சக்திவேல் கூறுகின்றார். நாட்டுப்புற மக்களின் அறிவையும் அவர்களது நுண்ணுணர்வுகளையும் எடுத்துரைக்கும் அறிவின் சுருக்கமே பழமொழி எனலாம்.
தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் பழமொழியை ‘முதுமொழி‘ என்று குறிப்பிடுகிறது. இதனை,
அங்கதம் முதுசொல்லோடு அவ்வேழ் நிலத்தும் (தொல்-391)
ஏது நுதலிய முதுமொழி என்ப (தொல்-165)
என்னும் நூற்பாக்கள் வாயிலாகப் புரிந்து கொள்ளலாம். மேலும்,
நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்
மென்மை என்றிவை வியங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி
என்பது தொல்காப்பிய நூற்பா.
பழமொழி நானூறு
தமிழில் முதல் பழமொழி தொகுப்புநூல் ‘பழமொழி நானூறு‘. இதன் ஆசிரியர் முன்றுரை அரையனார். ஒவ்வொரு செய்யுளிலும் ஒரு நீதிக் கருத்துக்களை விளக்குவதாக மொத்தம் நானூறு செய்யுள்கள் அமைந்துள்ளன. நானூறு என்பது தொகையமைப்பு, புறநனூறு, அகநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு என்னும் தொகை நூல்களுள் நிலவும், நானூறு செய்யுட்கள் என்னும் தொகுப்பு மரபை தழுவியதாகும் என்று புலியுர்க் கேசிகன் கூறுகின்றார். இந்த பழமொழி நானூறு சுட்டும் கல்லாதவாகளைப் பற்றிய செய்திகள் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றன.
கல்வியறிவில்லாதவர்கள், கல்லாதவர்கள் இவர்கள் எவ்வளவுதான் இயற்கையறிவுடன் பேசினாலும், கல்வியறிவுடையவர்கள் ஏற்றுக்கொள் மாட்டார்கள். இதனையே ஆசிரியர் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்.
ஒழுக்கப் பண்பு
பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் என்ற முதுசொல்லிற்கேற்ப ஒரு பெண் சமுதாயத்தில் ஒடுக்கமுடையளாக வாழ்கிறாள். அவ்வொழுக்கத்திலிருந்து தவறினால் பலத்தூற்றுதலுக்கு ஆளாவாள். எனவே முடிந்தவரை ஒழுக்கக் குறைபாடின்றி வாழ்வாள். ஒழுக்கத்தின் சிறப்பினாலே வரும் உயர்வைவிட ஒருவருக்கு வேறொன்றுமில்லை.
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அகற்குத் தக (பா.எ-391)
என்று வள்ளுவரின் சொற்களுக்கேற்ப கற்றவர்கள்தான் கற்றுணர்ந்தபடி வாழ்வை அமைத்துக் கொள்வார்கள். கல்லாதவர்கள் பிறர் அறிவுரைக்குறைவுடன் கூறினாலும் கேட்பதில்லை. அவர்கள் எண்ணம் போனபோக்கில் ஒழுக்க குறையுடன் வாழ்கின்றார்கள். இதனையே ஆசிரியர்,
கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்தோர்
பொல்லாத்தில்லை ஒருவற்கு- நல்லாய்
ஒழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை,
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு (57)


கள்ளத்தனம்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற முதுசொல்லிற்கேற்ப ஒருவன் தவறு செய்துவிட்டான் என்றால், அவன் எவ்வளவுதான் மறைத்துவைத்தாலும் அவனது முகம் காட்டிக்கொடுத்துவிடும். மழை காலங்களில் வெள்ளம் வருகின்ற இடம் நனைந்து காணப்படுவதைப் போல கள்ளமான மனது உடையவர்களையும் அவர்களின் முகத்தைப் பார்த்து தொரிந்து கொள்ளலாம். ஆதலால் மனதில் கள்ளத்தனமின்றி வாழ்தலே சிறந்த வாழ்க்கையாகும். கள்ளமனதுடைய வாழ்க்கை நிலையற்றது. இதனையே ஆசிரியர்,
வெள்ளம் பெருங்காலை ஈரம்பட்டதே போல்
கள்ளம் உடையவரைக் கண்டே அறியலாம்
ஒள்அமர் கண்ணாய் ஒளிப்பினும், உள்ளம்
படர்ந்த்தே கூறும் முகம் (87)
கல்வியறிவு
இயற்கையறிவை விட கல்வியறிவே சிறந்தது. ஒருவன் நூல்களை வாசித்தால் மட்டும் போதாது. அதிலிருந்து கேள்விகள் எழ வேண்டும். அப்போதுதான் அதற்கு விடை கிடைக்கும். பொது இடத்தில் சென்று தான் கற்றதை விளக்கிக் கூறும்போது பிழை ஏற்பட்டால் அது கற்றவனுக்கு அவமதிப்பை உண்டாக்கும். எனவே கசடற கற்க வேண்டும். கல்லாதவன் எவ்வளவுதான் இயற்கையறிவினால் தான் கண்ட நுட்பங்களைக் கூறினாலும் கற்றவர்கள் மத்தியில் அதை ஏற்க மாட்டர்கள். எனவே கல்வியறிவே சிறந்ததாகும்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாடும் உயிர்க்கு (பா.எ-392)
என்று வள்ளுவர் கூறுகின்றர். கல்வி என்பது மனிதனுக்கு இருகண்கள் போன்றது என்பதாகும். இதனையே ஆசிரியர்,

கல்லாதான்கண்ட கழிநுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால் சோர்வுபடுதலால்-நல்லாய்
வினாமுந்துறாத உரையில்லை இல்லை
கனாமுந் துறாத வினை(146)
என்கின்றார்.
சொல்லாற்றல்
ஒருவன் தான் கற்ற செய்தியை மற்றொருவரிம் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால் அவர் சொல்லாற்றல் பெற்றிருக்க வேண்டும். நூலறிவு இருந்தால் மட்டுமே உரையாட முடியும். ஒருவன் கல்வியறிவின்மையால் சொல்லாற்றலை வைத்துக்கொண்டு நல்ல அறிவுடையேம் என்று கூறுவதில் எவ்வித பயனுமில்லை.
தொட்டணைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றணைத்தூறும் அறிவு (பா.எ-396)
என்ற வள்ளுவரின் குறளிற்கேற்ப நல்ல நூற்களைப் படிக்கப் படிக்கத்தான் அறிவு வளரும், புதிய கருத்துக்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதற்கும், பேச்சாற்றலை வளர்ப்பதற்கும் கல்வியறிவே இன்றியமையாததாகும். இதனையே ஆசிரியர்,
கல்லாதான் கண்ட கழிவநுட்பம் காட்டரிந்தால்
நல்லேம்யாம் என்றொரு நன்கு மதித்தலென்
சொல்லால் வணங்கி வெகுண்டு அருகிற்பார்க்கும்
சொல்லாக்கால் சொல்வது.(205)
அறிவைக் கல்வியால் செப்பமுடையதாக்கி சொல்லாற்றலுடன் விளங்க வேண்டும் என்கின்றார்.


கற்றவர் தொடர்பு
ஒருவன் தான் கற்ற கல்வியை அதனால் உண்டான நுட்ப அறிவினை பிறரிடம் பதிர்ந்து கொள்ளும் போது அவனும் கல்வியறிவுடையவனாக இருக்க வேண்டும். அப்போதுதான் புதுப்புது கருத்துக்கள் தோன்றும். கல்லாதவனிடம் சென்று கலந்துரையாடினால் அவன் அதை ஏற்றுக்கொள்ளமாட்டான். தவறாகவே கருதுவான். கற்றவர் கற்றவரிடத்தில் மட்டுமே நுட்பப் பொருள் பற்றிக் கூற வேண்டும். அப்போதுதான் மதிக்கப்படுவான்.
கல்வியான் ஆக கழிநுட்பம் பல்லார்முன்
சொல்லிய நல்லவும் தீயவாம்-எல்லாம்
இவர்வரை நாட தமரையில் லார்க்கு
நகரமும் காடுபோன்றாங்கு(213)
தம் குடும்பத்தினர் எவருமே இல்லாத ஒருவர் நகரத்தில் வாழ்ந்தால் கூட காட்டில் வாழ்வது போல் தனிமையாகி விடுவார். அதுபோல் கற்றவரும் கற்றவரிடத்து தொடர்பு இல்லையென்றால் கற்றதற்குப் பலனில்லை என்கின்றார்.
முடிவுரை
கல்வி என்பது கடல் போன்றது. அதை எவ்வளவுதான் படித்தாலும் கரை என்பது இல்லை. மக்களின் வாழ்க்கை முறையினை நிர்ணயிப்பது கல்வியாகும்.

எழுதியவர் : பெ. பால்முருகன் (30-Oct-15, 10:36 am)
சேர்த்தது : கவி பாலு
பார்வை : 461

மேலே