ஒரு மாலை பொழுதினில் !
======================
சில
நிமிடங்கள் முன் பார்த்த முகம்
புது முகத்தை உறவால் புதுபிக்க
தெரியிவில்லை
பயணித்த பேருந்து காணலில்
மறைந்து போல
காற்றிலே கண்ணிலிருந்து கரைந்தது
அவள் முகம் !
அது
இருவேறு சாலை சந்திப்பு
ஆனால்
நான் மட்டும் தனியாக !
நான்
இறங்கிய பேருந்தில் -என்
காதல் மட்டும் பயணித்தது
அவள் புன்னகையுடன் !
புயலில் சிக்கிய காகிதம் போல
காதல்
மண்ணில் பட்டு வலி தாங்காமல்
பயணித்தது அந்த பேருந்து பின்னால் !
சாலையில் உடைந்த கன்னாடிகுட
என்னை
பிரதிபலிக்க மறுத்தது !
பக்கத்து தோட்டத்திலிருந்த
சூரிய மலரும் முகம் சுளிர்த்து
மேற்கே திருப்பியது !
எல்லோரையும் போலவே
எந்த சலனமும் இன்றி மறைந்த
பேருந்திற்கு பின் தெரிந்தது
என் வீட்டிற்க்கான வழி
அந்த
மாலை பொழுதில் !
==========================