தீவிரவாதமா தீராத தாகமா
தனி நாடு கோரும் தமிழ் ஈழம்
எல்லைக்கு போராடும் பாலஸ்தீனம்
இழந்த நிலத்தை மீட்க போராடும் ஐயர்லாந்து
இனத்துக்காக புது நாடு போடாலாந்து
தம் மதத்தை காப்பதாய் எண்ணி
உலகெங்கும் பரவிக்கிடந்து,
எண்ணற்ற உயிர்களை பறிக்கும்,
மதத்துக்காக மனிதனை தின்னும்,
மத தீவிரவாதம்.
கற்பை காக்க
கயவனை கொள்ளும்
கன்னி பெண் தீவிரவாதியா ?
குஞ்சை காக்க
கழுகை கொத்தும்
பெட்டை கோழி தீவிரவாதியா ?
பிரபாகரனுக்காக அழுத நெஞ்சு
ஒசாமாவின் மறைவால் நிம்மதி அடைகிறது
நோக்கம் வேறுபடலாம்
காரணங்கள் வேறுபடலாம்
நியாயங்கள் பல இருக்கலாம்
ஆனால் இவர்கள்
நடந்த பாதையும்
அடைந்த கதியும் ஒன்றே.
வன்முறை என்பது இருமுனை ஆயுதம்
இருதரப்பும் ஏந்தும் ஆயுதம்
மனிதனை மனிதன்
அடக்க நினைத்தால்
மற்றவர் நிலையை
உணர மறுத்தால்
தன் கருத்தை பிறர்
மீது திணிக்க நினைத்தால்
தம் மதமே உலகில்
சிறந்ததென்று கொக்கரித்தால்
தீவிரவாதேமே தலைவிரித்தாடும்
மண்ணுக்காக பலர் போராட?
மதத்துக்காக பலர் போராட?
மனிதனுக்காக யார் போராட ?
நியாயங்கள் பல இருப்பினும்
காயங்கள் பல இருப்பினும்
சோகங்கள் நிறைந்திருப்பினும்
தம் கொள்கை வெல்ல
உயிர் கொடுக்க துணிந்தவனுக்கு
பிறரின் உயிரையும், உடமையையும்
அழிக்கும் உரிமை இல்லை
எவருக்கும் இல்லை