கடசிக்கடிதம்
ஒருநாள்
பார்த்துக்கொண்டோம்
பலநாள்
பார்வையை பரிமாறிக்கொண்டோம்
" எப்படியிருக்க'
"நல்லாயிருக்கேன்" என
தொடங்கி
"ச்சீ....போடா "
"ச்சீ...போடி" என
செல்ல அடிகள் எனும் போர்வையில்
தொட்டுக்கொள்ளும் நிலையடைந்தோம்
ஒருநாள்
நீ
எங்கோ பார்க்க
உன் கன்னத்தில்
என் இதழை
பட்டும் படாமல்
பயத்தில்
முத்தமிட்டு
முகத்தை திருப்பிக்கொண்டேன்
இன்றுவரை
எனக்கு தெரியாது
நீ
முறைத்து
பார்த்தாயா
முக
மகிழ்ச்சியில்
பார்த்தாயா என்று
" உன் பிறந்தநாள் பரிசாக என்ன வேண்டும்" என
நீ கேட்க
"முத்தம் வேணும் " என்று
தயங்கிக்கொண்டே கேட்டேன்
நீ தயங்காமல் கொடுத்தாய்
ஒருநாள்
பூத்த
காதல் என்றாலும்
அதை
படி,படியாக
பலப்படுதிக்கொண்டோம்
ஜாதி, மதம்,
கெளரவம், அந்தஸ்த்து
இவையாவும்
நம்மை பிரிக்க நினைத்து
தோற்றுவிட்டநிலையில்
மரணம்
நம்மை பிரித்துவிட்டதே என்று
நீ
கல்லறைக்குள் கலங்காதே
உன்
பக்கத்தில்தான்
நானும் படுத்திருக்கேன்