மேன்மைகள் உறுவாரோ

எத்தனைக் கோயில்கள் இருப்பினும் வாழ்ந்திட
ஏழைக்கு வீடுமிலை அவன் மேனிக்கு ஆடையுமிலை – இங்கு
எத்தனைத் தெய்வங்கள் இருப்பினும் வயிற்றிற்கு
எச்சிலைச் சோறுமிலை – இது – ஏங்கித் தவிப்போரின் நிலை !

எத்தனைப் பதிகளை ஏகியப் போதிலும்
இன்பத்தின் சாயலிலை - உடல் உழைப்பின்றி ஓயலிலை – ஏழை
எத்தனை வேண்டுதல் வேண்டிய போதிலும்
இறைவனின் அருளுமிலை – அவன் ஈந்திட்டப் பொருளுமிலை !

எத்தனைப் படையல்கள் படைத்திட்டப் போதிலும்
இறைவனும் உண்டதிலை – அதை எவருமே கண்டதிலை – செல்வன்
எத்தனை ஆயிரம் இறைத்திட்டப் போதிலும்
எதையுமே கொண்டதிலை – கண்டு – எவருமே விண்டதிலை !

எத்தை உண்மைகள் எடுத்துரைத் திட்டாலும்
என்று திருந்துவாரோ ? பக்தர் என்று வருந்துவாரோ ? மூட
முத்திரை தன்னை முகத்திலழித்தவ்ர்
மேன்மை யுருவாரோ ? அறிவுப்பாதை வருவாரோ ?

எழுதியவர் : இராம்பாக்கம் .கவிஞர்.தன.கன (1-Nov-15, 8:08 am)
பார்வை : 87

மேலே